Kanchan Vasdev
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணிக்கு மற்றொரு அதிர்ச்சியாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புதன்கிழமை, பஞ்சாபில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்காது என்று அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: After Mamata Banerjee, Punjab CM Bhagwant Mann says no alliance with Congress in Punjab
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி காங்கிரஸுடன் திரிணாமுல் காங்கிரஸ் எந்த பேச்சுவார்த்தையிலும் இல்லை என்றும், மேற்கு வங்கத்தில் 20 லோக்சபா தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்திருந்த நிலையில் பகவந்த் மானின் அறிவிப்பு வந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “தேஷ் மே பஞ்சாப் பனேகா ஹீரோ, ஆம் ஆத்மி கட்சி 13-0” என்று கூறினார். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்காது என்று பகவந்த் மான் திட்டவட்டமாக கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், பகவந்த் மான் தனது நிலைப்பாட்டை மென்மையாக்குவதாகத் தோன்றியது, காங்கிரஸுடனான எந்தவொரு கூட்டணியிலும் தேசிய தலைமை இறுதி முடிவை எடுக்கும் என்று சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து, சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கான மேயர் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி இணைந்து செயல்பட்டது.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கூட்டாக சவால் விடுவதை நோக்கமாகக் கொண்டு, இது இந்தியா கூட்டணிக்குள் தேர்தல் ஒத்துழைப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சதா, தேசிய தலைநகரில் அறிவித்தார்.
”வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எங்களிடம் 40 சாத்தியமானவர்களின் பட்டியல் கிடைத்துள்ளது, அதில் 13 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களிடம் கணக்கெடுப்பு நடத்துவோம். வெற்றி பெறுவதற்கான அளவுகோலைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்,” என்று ராகவ் சதா கூறினார்.
இந்த 40 பேரில் சில தொகுதிகளில் 2-3 வாய்ப்புகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். இந்தப் பட்டியலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் ரிங்குவும் இடம்பெற்றுள்ளார்.
அனைத்து கண்களும் பஞ்சாபில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் மீது உள்ளது, கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியை எதிர்த்ததால், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசாங்கம் தங்கள் மீது பழிவாங்கலை கட்டவிழ்த்துவிட்டதாகவும், பல தலைவர்கள் ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் மற்றும் பிற வழக்குகளில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏற்கனவே வெவ்வேறு தொகுதிகளில் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளது, இது ஆம் ஆத்மியுடன் கூட்டணி இருக்காது என்பதைக் குறிக்கிறது. சமீபத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் (பொறுப்பு) தேவேந்திர யாதவ் உடனான பல கருத்துக் கூட்டங்களில், கட்சி தொண்டர்கள் எந்த கூட்டணியையும் எதிர்த்தனர். பஞ்சாபில் எந்த கூட்டணியும் நடக்காது என்று காங்கிரஸ் தலைவர்கள் பெயர் குறிப்பிடாமல் உறுதி செய்தனர்.
பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் இருந்து ஒரே ஒரு எம்.பி உள்ளார். ஆம் ஆத்மிக்கு எம்.பி.,யாக காங்கிரஸ் எம்.பி சந்தோக் சவுத்ரியின் மறைவுக்குப் பிறகு அந்த இடம் காலியானதைத் தொடர்ந்து மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜலந்தரைச் சேர்ந்த சுஷில் குமார் ரிங்கு மட்டும் தான் உள்ளார்.
பஞ்சாபில் காங்கிரசுக்கு ஆறு எம்.பி.க்கள் இருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“