வடகிழக்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்; பாஜகவுக்கு முந்தைய பெருவெற்றி கிடைக்குமா?
வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளை பார்க்கலாம்.
தலா 60 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக 2018-ல் பெற்ற வெற்றியைத் தக்கவைக்கப் போராடும். ஏனெனில், திரிபுராவில் பாஜக ஆட்சியில் உள்ளது. அதேநேரம், நாகாலாந்தில் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (என்டிபிபி), மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியுடன் (என்பிபி) கூட்டணியில் உள்ளது.
Advertisment
தலா 60 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகின்றன.
முந்தைய தேர்தல்கள் எப்படி நடந்தன தற்போது என்ன நடக்கின்றன என்பதைப் பாருங்கள்:
நாகாலாந்து
தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சியும் (என்டிபிபி) பாஜகவும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், என்டிபிபியின் நெய்பியு ரியோ முதலமைச்சரானார்.
இந்த ஆண்டு, நாகா அரசியல் பிரச்னைக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறுதி தீர்வின் நிழலில் மாநிலம் மீண்டும் ஒரு தேர்தலைக் காண்கிறது. இந்த நம்பிக்கையில்தான் இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் 2021ல் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியது.
நாகாலாந்து
ஒரு காலத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்த நாகா மக்கள் முன்னணி (NPF), தேர்தலில் NDPP-BJP கூட்டணிக்கு எதிராக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டைப் போலவே, இரு கட்சிகளும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அறிவித்துள்ளன, பாஜக 20 இடங்களிலும், என்டிபிபி மீதமுள்ள 40 இடங்களிலும் போட்டியிட உள்ளது.
மேகாலயா
பாஜக மற்றும் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. 2018 தேர்தலில், சங்மாவின் கட்சி பாஜக மற்றும் பிராந்தியக் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டது.
மேகாலயா
ஆனால் 60 இடங்களில் 53 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் மதமாற்ற பிரச்னை மற்றும் தேவாலய தாக்குதல்கள் நடைபெற்றன. இது பாஜகவுக்கு புதிய பிரச்னையை ஏற்படுத்தியது. பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற எண்ணம் உருவானது.
மேலும், மேகாலயாவில் புதிதாக நுழைந்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வருகிறது.
திரிபுரா
25 ஆண்டுகால இடது முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. மே 14, 2022 அன்று, திடீர் மாற்றமாக, பிப்லாப் தேப்பைக் கைவிட்டு, ஒப்பீட்டளவில் குறைந்த முக்கியத்துவமுள்ள மாணிக் சாஹாவை முதல்வராக பாஜக கொண்டு வந்தது.
திரிபுரா
கடந்த காலத்தில் காங்கிரஸும் CPI(M)ம் இணைந்து சண்டையிட்டன. தற்போது, இருவருக்குமிடையே ஒரு கூட்டணி பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் 2021 இல் உருவாக்கப்பட்ட பழங்குடியினர் TIPRA Motha கட்சி, BJP யின் கூட்டாளியான IPFT யின் பழங்குடியினரின் வாக்குகளைப் பறிக்கக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/