Avinash Nair , Karunjit Singh
ஏறக்குறைய கட்ச் பகுதியில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு அதானி துறைமுகம் (Adani Ports and Special Economic Zone (APSEZ)) திங்கள் கிழமை அன்று வர்த்தக ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அடுத்த மாதத்தில் இருந்து ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் எந்த கண்டெயனர் சரக்குகளையும் கையாளமாட்டோம் என்று அறிவித்திருந்தது.
நவம்பர் 15, 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவரும் EXIM கொள்கலன் சரக்குகளை APSEZ கையாளாது என்பதை நாங்கள் அறிவித்துக் கொள்கிறோம். இந்த வர்த்தக ஆலோசனை அறிக்கை அதானி துறைமுகம் குழுமத்தால் இயக்கப்படும் அனைத்து வர்த்தக முனைகளுக்கும் பொருந்தும். மூன்றாம் தரப்பு முனையங்களுக்கும் ந்த அறிவிப்பு பொருந்தும் என்று அக்குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சுப்ரத் திரிபாதி கையெழுத்திடப்பட்ட அறிக்கை கூறியுள்ளது.
ஈரானுக்கான ஏற்றுமதி செலவில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்தை அணுக வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பின் பொது இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்கும்நருமான அஜய் சஹாய், “இந்த முடிவு ஏற்றுமதியாளர்களை வெவ்வேறு துறைமுகங்களின் வழியாக தங்களின் பொருட்களை அனுப்ப கட்டாயப்படுத்தும். வர்த்தகத்தை பொறுத்தவரை இது ஏற்றுமதி செலவை இது அதிகரிக்கும் என்பதால் பின்னடைவை ஏற்படுத்தும். பல வட இந்திய ஏற்றுமதியாளர்கள் முந்த்ரா துறைமுகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று கூறினார்.
சஹாயை பொறுத்தவரை, 20 அடி கண்டெய்னரை ராஜோட்டில் இருந்து முந்த்ராவிற்கு அனுப்ப ஆகும் செலவு ரூ. 13 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரை வரை மட்டுமே. ஆனால் அதே அளவுள்ள கண்டெய்னரை ராஜ்கோட்டில் இருந்து நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு அனுப்ப ஆகும் செலவு ரூ. 60 ஆயிரம் ஆகும்.
இது தொடர்பாக தொடர்பு கொண்ட போது இந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவில் அதானி துறைமுக முனையங்களுக்கு வரும் கண்டெய்னர் சரக்குகளின் விவரங்களை APSEZ வழங்கவில்லை.
வர்த்தக வட்டாரங்கள், ஈரான் போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வர்த்த துறைமுகம் மற்றும் பெரிய கண்டெய்னர்களை கையாளும் துறைமுகமான முந்த்ராவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் பழங்களும் உலர் கொட்டைகளும் தான். அதில் பிஸ்தா, பேரீட்சை, பாதாம் போன்ற உலர் உணவுகளும் அடங்கும். மேலும் கம்பளி பொருட்கள், இயற்கை மற்றும் செயற்கை ரசாயனங்கள் என இந்தியா ஈரானில் இருந்து இந்தியா 2020ம் நிதி ஆண்டில் 1397 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
பழங்கள் மற்றும் கொட்டை வகைகள் தான் அதிக அளவில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் அத்தி, பேரீட்சை, முலாம்பழ விதைகள், உலர் திராட்சை ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து 2020ம் நிதி ஆண்டில் இந்தியா 435 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் எதிரொலியாக ஆப்கானிஸ்தானின் நாணயத்தின் தேய்மானம் ஏற்கனவே அந்நாட்டின் வர்த்தகம் வியத்தகு அளவில் வீழ்ச்சியடைய வழிவகுத்தது என்று நிபுணர்கள் கூறினர்.
பாறை உப்பு மற்றும் பேரீட்சை ஆகியவற்றை பாகிஸ்தானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. 2020ம் நிதி ஆண்டில் இந்தியா 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.
தானியங்கள், தேயிலை, காபி மற்றும் மசாலாப் பொருட்கள் மற்றும் கரிம இரசாயனங்கள் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் பிற இரசாயனங்கள் உட்பட ஈரானுக்கு இந்தியா 3374 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை 2020ம் நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது.
ஆப்கான் தாலிபான்கள் வசம் வந்த பிறகு தொடர்ந்து கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள்
பாகிஸ்தானை விட ஈரான் மிகவும் குறிப்பிடத்தக்க வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 816 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அதே நிதி ஆண்டில் ஆப்கானிஸ்தான் 998 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் இருந்தது.
செப்டம்பர் 16ம் தேதி அன்று வருவாய்த்துறை புலனாய்வு பிரிவு இயக்குநரகம் செமி ப்ரோசஸ்ட் டால்க் கற்களை கொண்டு வந்த இரண்டு கண்டெய்னர்களில் இருந்து ஹெராயின் போதைப் பொருட்களை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியே வந்தது. விஜயவாடாவில் செயல்பட்டு வரும் வர்த்தக நிறுவனத்திற்கு இந்த டால்க் ஸ்டோன்கள் கொண்டு வரப்பட்டன.
APSEZ என்பது ஒரு துறைமுக ஆபரேட்டராகும், இது கப்பல்களுக்கு சேவைகளை வழங்குகிறது. முந்த்ராவில் உள்ள முனையம் அல்லது எங்கள் துறைமுகங்கள் வழியாக செல்லும் கொள்கலன்கள் அல்லது மில்லியன் டன் சரக்குகள் என்ன என்று ஆராயும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று ஐந்து நாட்கள் கழித்து அதானி குழுமம் அறிவித்தது.
செப்டம்பர் 23ம் தேதி அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆந்திராவில் பதிவு செய்யப்பட்ட அந்த நிறுவனம் குறித்தும், 2 கண்டெய்னர்கள் மூலம் பெறப்பட்ட ஹெராயின் மதிப்பு 21 ஆயிரம் கோடி இருக்கும் என்றும், இதே நிறுவனம், ஆப்கானிஸ்தானில் உள்ள அதே நிறுவனத்திடம் இருந்து ஜூன் மாதமும் இறக்குமதி செய்தது என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
பல நாட்களுக்குப் பிறகு, பஜ்ஜில் உள்ள போதைப்பொருள் மற்றும் மனோதத்துவப் பொருட்களுக்கான சிறப்பு நீதிமன்றம் (NDPS), ”கைப்பற்றப்பட்ட ஹெராயின் இறக்குமதி மூலம் முந்த்ரா அதானி துறைமுகம், அதன் நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரம் ஏதேனும் பயன்களைப் பெற்றுள்ளதா”? என்று DRIஐ விசாரிக்க உத்தரவிட்டது. அக்டோபர் 6 ம் தேதி, வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
அதானி குழுமம் இந்தியாவில் 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை கையாளுகிறது. குஜராத்தில் உள்ள முந்த்ரா, ஹஜிரா, கேரளாவில் விழிஞம், தமிழகத்தில் எண்ணூர், காட்டுப்பள்ளி, மகாராஷ்ட்ராவில் திகி, ஆந்திராவில் கிருஷ்ணப்பட்டினம் ஆகிய இடங்களில் கண்டெய்னர்களை கையாளுகிறது அதானி குழுமம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.