குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) உள்ளிட்டவைகளை கண்டித்து தேசிய அளவில் நடைபெற்று வரும் போராட்டம் ஒரு மாதகால அளவை கடந்துள்ளது. இதன்மூலம், தேசிய கட்சிகள் மட்டுமல்லாது, அந்தந்த மாநில கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்ற ஐயப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை என்றே கூறவேண்டும்.
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான போராட்டங்களால், நாட்டின் பலபகுதிகளிகல் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, போராட்டக்காரர்களை சந்தித்து பேச முன்வரவில்லை. பா.ஜ. தான் இப்படியென்றால், எதிர்க்கட்சிகளோ, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது, நாங்கள் முதலில் மத்திய அரசை கண்டித்து அமைதியான வழியிலேயே போராட்டத்தை துவக்கினோம். அது இவ்வளவு வலிமையான போராட்டமாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிறிய அளவில் துவங்கிய போராட்டம் நாடு முழுவதும் மிகப்பிரமாண்டமான போராட்டமாக வெடித்துள்ளது.
சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி ஜனவரி 11ம் தேதியும், சிபிஎம் பொலிட்பீரோ ஜனவரி 12ம் தேதியும், 20 எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனவரி 13ம் தேதியும், இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டன. இந்த போராட்டத்தை அடுத்த கட்டமாக முன்னெடுத்து செல்வது தொடர்பாகவும் அவர்கள் விவாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் வெளிவர உள்ள நிலையிலும், தேசிய மக்கள்தொகை பதிவு (NPR) ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எதி்ர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சிஏஏ, என்பிஆர் என்ஆர்சி உள்ளிட்டவைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல முக்கிய விவகாரங்களை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
முத்தலாக், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) திருத்தச் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களத, மக்களவையில் எளிதில் நிறைவேற்றப்பட்டபோதிலும், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால்,, பெரும்எதிர்ப்புகளுக்கு இடையிலேயே இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடிந்தது.
2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை திருத்த சட்டம் வகை செய்கிறது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைகழகம் உள்ளிட்டவைகளில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தங்களது வாதத்துக்கு வலுவாக சேர்த்துக்கொண்டது.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் செப்டம்பர் மாதத்தில் அறிவித்திருந்த போராட்டம், மாணவர்களின் இந்த போராட்டத்தால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக டிசம்பர் பிற்பகுதியில் தான் நடத்த முடிந்தது அந்தளவிற்கு மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் இறங்கிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஒரு அதிர்ச்சியை பரிசாக அளித்தது என்றே கூறவேண்டும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையிலும், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, போராட்டக்காரர்களின் உடைகளை பாருங்கள் அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடியே பேசிய நிகழ்வு பலரையும் கடும் அதிர்ச்சியடைய வைத்தது.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை அரசியல் ரீதியான சவாலாக ஏற்றுக்கொண்ட பாரதிய ஜனதா அரசு, அதற்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில், டில்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நிகழ்ச்சி நடத்தியது.
தேர்தலில் தோற்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி, திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குளிர்விக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் இருப்பதாக பாரதிய ஜனதா பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியது.
இந்த போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின் பின்னணியில் முஸ்லீம்கள் இருப்பதாக காட்டும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்டதோடு மட்டுமல்லாது, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகவும் குற்றம் சுமத்தினர். ஐஐடி , ஐஐஎம் கல்விநிறுவனங்களில் போராட்டங்களின் பின்னணியில் உள்ளோர் குறித்த விபரங்களையும் பா.ஜ. தலைவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்
அமைதி வழியில் துவங்கிய இந்த போராட்டம் திடீரென்று வன்முறை மற்றும் போராட்டமாக மாறியதன் பின்னணி குறித்தும் பாரதிய ஜனதா கட்சியினர் கேள்வி எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தை 1974 மாணவர் போராட்டத்துடன் எதிர்க்கட்சிகள் ஒப்பிட்டநிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தவறான முன்னுதரணங்களுடன் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.