After Pulwama attack Govt withdraws security cover : பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடைபெறக் கூடும் என்றெண்ணி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று கேட்ட தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை ரத்து செய்து அறிவித்திருக்கிறது இந்திய அரசு.
5 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து
மிர்வாய்ஸ் உமர் ஃபரூக், ஷபீர் ஷா, ஹாசிம் குரேஷி, பிலால் லோன், மற்றும் அப்துல் கானி பாத் ஆகியோர்களின் பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புகளை வாபஸ் பெறுவதாகவும், அவர்களுக்கு அரசு ஏதேனும் சலுகைகள் அல்லது அங்கீகாரங்கள் அளித்திருந்தால் அதனையும் வாபஸ் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆல் பார்ட்டீஸ் ஹூரியத் கான்ஃபிரஸின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக், “எப்போதும் பாதுகாப்பு கேட்டதில்லை. பாதுகாப்பை வாபஸ் பெறுவதால் எந்த பிரச்சனையும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பாதுகாப்பை நீட்டிப்பதாலோ, நீக்குவதாலோ காஷ்மீரின் பிரச்சனைகளிலும், அதன் உண்மை நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் வந்துவிடாது என்று அவருடைய அறிக்கையில் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினை ராஜ்நாத் சிங் பாதுகாப்பு குறித்து உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தப்பட்ட பின்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்நாத் சிங் பேட்டி
இது குறித்து ராஜ்நாத் சிங் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ ஏஜெண்சிகளிடம் தொடர்பில் இருக்கும் மக்களுக்கு அளிக்கப்பட்ட வந்த பாதுகாப்பு திருப்பி பெறப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் சிலர் தீவிரவாத இயக்கத்துடன் இணைப்பில் உள்ளனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் உள்த்துறை செயலகத்தின் பரிந்துரையால், மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ரத்து செய்து அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : இருப்பக்கமும் எண்ணற்ற உயிர்களை பலிகொடுக்கவா போர் புரிய வேண்டும் ? தமிழக வீரரின் அண்ணன் கேள்வி