Advertisment

பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து, ஹரியானாவில் களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சி

ஹரியானா அரசியலில் நுழையும் ஆம் ஆத்மி கட்சி; மூத்த ஐஏஎஸ் அதிகாரியை கட்சியில் சேர்க்க திட்டம்

author-image
WebDesk
New Update
பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து, ஹரியானாவில் களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சி

After Punjab, AAP all set to venture into Haryana: பஞ்சாபில் 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி அண்டை மாநிலமான ஹரியானாவில் நுழைய முழு வீச்சில்  தயாராகி வருகிறது. ஹரியானாவில் 2024ல் விதான்சபா (சட்டமன்றம்) தேர்தல் நடைபெற உள்ளது. 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி அலுவலகங்களைத் திறப்பது அல்லது பூத் அளவிலான கட்சிப் பணியாளர்களை உருவாக்குவது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம், ஆம் ஆத்மி கட்சி ஹரியானாவில் அடுத்த விதானசபா தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது.

Advertisment

அதற்காக, ஹரியானாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்காவை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு முறை அசோக் கெம்காவை தொடர்பு கொண்டு அவரை கட்சியில் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி முயன்றதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆதாரங்கள் தெரிவித்தன.

1991-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா, தனது 30 ஆண்டுகால நீண்ட அரசு பணியாளர் வாழ்க்கையில் 54 இடமாற்றங்களை எதிர்கொண்டுள்ளார். அவர் ஏப்ரல் 30, 2025 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

1980 களில் ஐஐடி (கரக்பூர்) நாட்களில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பைக் கொண்டுள்ள அசோக் கெம்கா, ஆம் ஆத்மி கட்சியில் "மதிப்பிற்குரிய மற்றும் குறிப்பிடத்தக்க இடத்தை" வழங்கினால், விரைவில் கட்சியில் சேர்வது குறித்து "பரிசீலனை" செய்யலாம் என உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

ஐஐடி கரக்பூரில் இருந்த நாட்களில், அசோக் கெம்கா மற்றும் கெஜ்ரிவால் இருவரும் ஐஐடியில் வெவ்வேறு படிப்புகளை படித்து வந்தனர். கெம்கா, கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர், மற்றும் கெஜ்ரிவால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார், மேலும் கெம்காவை விட கெஜ்ரிவால் ஒரு வருடம் இளையவர், ஆனால் அவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள்.

ஆம் ஆத்மியின் பல செய்தித் தொடர்பாளர்கள் சூசகமாகவும் ட்வீட் செய்தும், ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் "முதன்மை ஆலோசகராக" கெம்காவை சேர்க்க உள்ளதாக தெரிவித்ததை அடுத்து, சாத்தியக்கூறுகள் வேகத்தை அதிகரித்து வருகின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவு செயலர் சனிக்கிழமை ட்வீட் செய்ததாவது: “அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்லூரி நண்பரும், ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் கெம்கா, தனது 30 ஆண்டுகால வாழ்க்கையில் 54 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர், ஹரியானாவில் ஆம் ஆத்மிக்கு வழிகாட்டும் சக்தியாக இருப்பார். அவர் ஐஏஎஸ் பதவியை விட்டு விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளார். ஆம் ஆத்மி குடும்பம் விரிவடைந்து வருகிறது.

எவ்வாறாயினும், கெம்காவிடம் கேட்டபோது, ​​​​ இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

அதிகாரத்துவத்திற்குள் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற கெம்கா, 2012 இல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மற்றும் DLF சம்பந்தப்பட்ட நில ஒப்பந்தத்தின் மாற்றத்தை ரத்து செய்தபோது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். அப்போது கெம்கா, நில இருப்புத் துறையின் ஒருங்கிணைப்பில் இருந்தார். அவர் உடனடியாக அந்த துறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசாங்கம் 2014 இல் ஹரியானாவில் ஆட்சிக்கு வந்த பிறகும், கடந்த ஏழு ஆண்டுகளில் மாநில அரசாங்கத்தின் கிட்டத்தட்ட செயல்படாத துறைகளில் கெம்கா நியமிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: மசூதியை சேதப்படுத்தி காவி சாயம் பூசிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும், ஹரியானாவில் கட்சியின் பொறுப்பாளருமான சுஷில் குப்தா, ஹரியானாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருந்தார். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மாநிலத்தின் அனைத்து 90 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி ஏற்கனவே தனது அலுவலகங்களை அமைத்துள்ளதாகவும், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் மூலம் மாநில அரசியலில் முழு அளவிலான நுழைவை மேற்கொள்ளும் என்றும், இறுதியில் 2024 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் என்றும் குப்தா கூறினார்.

கெம்கா, ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்தால், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற வேண்டும். இதேபோன்று, பஞ்சாபிலும், ஐபிஎஸ் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப்பும் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர் அமிர்தசரஸ் வடக்கில் 28000 வாக்குகள் வித்தியாசத்தில் SAD இன் அனில் ஜோஷியை தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தார்.

ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளதால், ஹரியானாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் பல தலைவர்களும் கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாக, கெம்கா, மத்திய அரசுப் பணியில் சேர கடுமையாக முயற்சி செய்தும், மத்திய அரசு அதைக் கருத்தில் கொள்ளவில்லை.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“

India Aam Aadmi Party Arvind Kejriwal Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment