new 20rs coin : கடந்த 2009ம் ஆண்டு முதன் முதலாக ரூ.10 நாணயங்களை அரசு வெளியிட்டது. அதன் பின்னர் தற்போது வரை 13 முறை ரூ.10 நாணயத்தின் வடிவத்தை மாற்றி வெளியிடப்பட்டுள்ளது. சரியாக பத்து வருடங்கள் கழித்து நேற்றைய தினம் ரூ. 20 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகள் ஆகியும், 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என்ற குழப்பம் மக்களிடம் இன்றளவு நீடித்து வரும் நிலையில், இப்போது மக்களுக்கு அடுத்த அறிமுகமாக 20 நாணயம் வெளியாகிறது.
ஏற்கனவே ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இதனை தொடர்ந்து ரூ.20 மதிப்பு நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.
ரூபாய் நாணயங்களை பார்வையற்றோரும் எளிதாக கண்டறிந்து பயன்படுத்தும் நோக்கத்தோடு, பிரதமர் நரேந்தர மோடி, நேற்று புதிய ரூ.20 நாணயத்தை அறிமுகப்படுத்தினார்.மற்ற நாணயங்கள் வட்ட வடிவில் இருக்கும் நிலையில் ரூ.20 நாணயங்கள் 12 கோணங்கள் அல்லது பக்கங்கள் கொண்ட வடிவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
இந்த ரூ. 20 நாணயம் 27 மிமீ விட்டம், அதன் விளிம்பில் 100 ரம்பப் பற்கள் இருக்கும். ரூ. 10 நாணயம் 65 சதவீத செப்பில் இருக்கும். 15 சதவீதம் துத்தநாகம் மற்றும் நிக்கல் ஒன்றுக்கு 20 சதவீதம் இடம்பெற்றிருக்கும்.
அதேபோல நாணயத்தின் உள்வட்டம், 75 சதவிகிதம் செம்பு, 20 சதவிகிதம் துத்தநாகம் மற்றும் 5 சதவிகிதம் நிக்கல் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களுக்கு ஆயுள் குறைவு தான். ஆனால் நாணயங்களுக்கு நீண்ட அயுட் காலம் உள்ளது.
நாணயங்களை அதிகம் மக்கள் புழக்கத்திற்கு கொண்டு வருவதன் மூலம், சில்லறை தட்டுப்பாடுகள் நீங்கும் என மத்திய அரசு சிந்திக்கிறது. அதனடிப்படையிலேயே ரூ. 20 நாணயம் மக்கள் பயன்பாட்டுக்காக வரவுள்ளது.
"வெவ்வேறு வடிவங்களில் உள்ள இந்த புதிய நாணயங்கள், பார்வையில்லாதோர் எளிதாக அடையாளம் காணுமாறும், அவர்களுக்கு உதவுமாறும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.