பாலியல் கொடுமை நடந்தால் மானமுள்ள பெண் இறந்து விடுவாராம்: கேரள காங். தலைவர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பெண் சொன்னால் ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பெண் சொன்னால் ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
After rape a woman with self respect will die Cong chief in Kerala

 Shaju Philip 

After rape, a woman with self-respect will die: Cong chief in Kerala :  முந்தைய காங்கிரஸ் தலைமையிலான UDF அரசாங்கத்தின் பல தலைவர்களும் அமைச்சர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணை ”பாலியல் தொழில் செய்பவர்” என்று அழைத்தார் காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

Advertisment

சி.பி.எம். தலைமையிலான எல்.டி.எஃப். அரசாங்கத்திற்கு எதிரான எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இவ்வாறு கூறினார். யு.டி.எஃப். தலைவர்களுக்கு எதிராக, பாலியல் தொழில் செய்பவர் ஒருவரை வைத்து, கதைகளை கட்டி தப்பித்துக் கொள்ள முதல்வர் நினைக்க கூடாது. கேரளா இதனை கேட்டு கேட்டு மிகவும் சோர்வாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

”அந்த பெண், மாநிலம் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புலம்பியிருந்தார். ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பெண் சொன்னால் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அவள் சுய மரியாதையுடன் இருந்தால், அவள் இறந்துவிடுவாள். இல்லையெனில் அது மீண்டும் நடக்காது என்பதை நம் சமூகம் உறுதிப்படுத்தும்” என்று அவர் கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

அன்றைய கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டியுடன் தொடர்பில் இருக்கின்றோம் என்று கூறி பல்வேறு வணிகர்கள் மற்றும் என்.ஆர்.ஐக்களை ஏமாற்றியது தொடர்பான சோலார் பேனல் ஊழலை பற்றி ராமச்சந்திரன் கூறுகிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமான ஏ.பி.அனில் குமார் அவரை பல்வேறு சூழலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் என்று 2013ம் ஆண்டு கூறினார்.

Advertisment
Advertisements

மாநிலம் முழுவதும் தான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானேன் என்று கூறிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மூலம் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிறீர்கள். உங்களுக்கு பெருமை இருக்கிறதா? வெட்கம் இல்லயா? உங்களுக்கு சுயமரியாதை இருந்தால், நீங்கள் ஒரு நாள் கூட வீணடிக்காமல் உங்களின் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக பணியாற்றிய இவரின் கருத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டம் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க வகையில் பேசிய அவரின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பானது. அதனை தொடர்ந்து தன்னுடைய கருத்திற்கு நிபந்தயனையற்ற வருத்தங்களை தெரிவிக்க முடிவு செய்தார். "எனது கருத்துக்களின் சில பகுதிகள் பெண்களுக்கு விரோதமாகக் கருதப்பட்டதால், எனது வருத்தத்தை நிபந்தனையின்றி வெளிப்படுத்துகிறேன்,’ ’என்றார்.

இருப்பினும் அவர் மீது கேரள மகளிர் ஆணையம் புகார் பதிவு செய்துள்ளது. அரசியல்வாதிகள் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வைக்கும் கருத்துகள் கேரளத்திற்கு அவமானம். இது போன்ற கருத்துகள் இனி அனுமதிக்கப்பட கூடாது. அவர் மன்னிப்பு கேட்பது அப்படி ஒன்றும் உண்மையாக இல்லை என்று அந்த ஆணையத்தின் தலைவர் எம்.சி. ஜோஸ்பின் அறிவித்துள்ளார்.

மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மட்டுமே இப்படியான கருத்துகளை பகிர முடியும். தற்கொலை செய்து கொள்ளாத பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு சுயமரியாதை இல்லையா? அதை அவர் அந்த அர்த்தத்தில் தான் கூறினாரா? அரசியல்வாதிகள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க கூடாது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: