நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட முகமது அப்சல் குருவின் மகன் காலிப் குரு 12-ம் வகுப்புத் தேர்வில் 441 மதிப்பெண்கள் பெற்று டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பள்ளி தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியானது. இதில் காலிப் குரு 500-க்கு 441 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அறிவியல் பாடத்தில் 94, வேதியியல் பாடத்தில் 89, இயற்பியல் பாடத்தில் 87, உயிரியல் பாடத்தில் 85 மற்றும் பொது ஆங்கில பாடத்தில் 86 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
தனது தந்தை தீவிரவாத குற்றச்சாட்டுக்குள்ளாகி தூக்கி லிடப்பட்ட போதிலும், காலிப் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளதாக சமூக இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற காலிப், 'நான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும். அதுவே என் பெற்றோர்களின் விருப்பம். அதை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.