நீதிபதி ஜோசப் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதியைச் சந்தித்த அட்டர்னி ஜெனரல்

அனைந்திந்திய அளவில் அனுபவத்தில் மூத்தவர்களுக்கே பட்டியலில் முன்னுரிமை என்று கூறும் தீபக் மிஸ்ரா

நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்களை இந்திரா பானர்ஜீ, வினித் சரண் ஆகியோர்களுக்கு அடுத்த நிலையில் நீதிபதியாக நியமித்து அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்த நிலைப்பாடு தொடர்பாக இந்தியாவின் அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்துள்ளார்.

இந்த நியமனங்கள் முழுக்க முழுக்க சீனியாரிட்டிப்படி உருவாக்கப்பட்டது என்று தீபக் கூறியுள்ளதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

கே.எம். ஜோசப் சினியாரிட்டி

உயர் நீதிமன்ற நீதிபதி அனுபவத்தினை வைத்து யாரையும் உச்சமன்ற நீதிபதியாக அறிவிக்க இயலாது.   இந்திய அளவில் யாருக்கு அதிக அளவு சீனியாரிட்டி உள்ளதோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த விதியினை முன்வைத்து தான் அனைவருக்கும் நீதித்துறையில் பணி உயர்வு அளிக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசு.

இந்திரா பானர்ஜி மற்றும் வினித் சரண் இருவருக்குமான அனைந்திந்திய சீனியாரிட்டி நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் இருக்கிறது. ஆனால் கே.எம்.ஜோசப் அவர்களுக்கான சீனியாரிட்டி 39வது இடத்தில் இருக்கிறது.

இருப்பினும் கே.எம்.ஜோசப் அவர்களின் உயர் நீதிமன்ற நீதிபதிக்கான அனுபவம் மற்ற நீதிபதிகளை விட மிக அதிகம். மேலும் அவரின் பணிக்காலம் ஜூன் 16, 2023 வரை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலீஜ்ஜியம் பரிந்துரைப் பற்றிய செய்தியினைப் படிக்க

சீனியாரிட்டிப் படி இதுவரை நியமிக்கப்பட்ட நீதிபதிகள்

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஷ்வர் இருவரும் ஒரே நாளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்கப்பட்டார்கள்.

ஆனால் தலைமை நீதிபதி பொறுப்பு என்று வரும் பட்சத்தில் செல்லமேஷ்வர் அவர்களின் நீண்ட கால உயர் நீதிமன்ற சேவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கே.எம்.ஜோசப்பினை இந்த வருடத்தில் இரண்டு முறை பரிந்துரை செய்தது கொலீஜ்ஜியம். ஜூலை 16ம் தேதி பரிந்துரை செய்த போது ஜோசப்புடன் சேர்த்து மேலும் இருவரை பரிந்துரை செய்தது கொலீஜ்ஜியம்.

ஆனால் இம்மூவருக்கும் சீனியாரிட்டி வரிசையில் தான் பணி நியமனம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

கே.எம்.ஜோசப் நியமனம் மீதான நீதிபதிகளின் அதிருப்தி

ஆனால் நீதிபதிகள் இது பற்றி கூறும் போது “2016ம் ஆண்டு உத்திரகாண்ட் மாநிலத்தில் அமையப்பெற்ற குடியரசுத் தலைவரின் ஆட்சி செல்லாது” என்று உத்தரவிட்டார் ஜோசப். இதற்காகத்தான் பணி நியமனத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close