சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வயதில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் என்பதால், அப்பருவ பெண்களை கோவிலில் அனுமதிக்கப்படுவதை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலை முழுவதும் திருவிதாங்கூர் தேவஸ்தானமே நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் தடையை தாண்டி ட்ரெக்கிங் செல்வதாக கூறி, தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை பெண்கள் வைத்திருக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை உட்பட எந்த ஆதாரம் வேண்டுமானாலும் பெண்கள் தங்களுடன் வைத்திருக்கலாம் என தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.