Advertisment

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் திருப்பி ஒப்படைத்த வேளாண்மை அமைச்சகம்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த நிதியாண்டில் வருடாந்திர ஒதுக்கீடான ரூ.1.24 லட்சம் கோடியில் ரூ.21,005.13 கோடியை திரும்ப ஒப்படைத்தது; 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் திரும்ப ஒப்படைப்பு

author-image
WebDesk
New Update
farmer

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த நிதியாண்டில் வருடாந்திர ஒதுக்கீடான ரூ.1.24 லட்சம் கோடியில் ரூ.21,005.13 கோடியை திரும்ப ஒப்படைத்தது; 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் திரும்ப ஒப்படைப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Harikishan Sharma 

Advertisment

சமீபத்திய ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் வேளாண்மை அமைச்சகத்தின் பட்ஜெட்டை கணிசமாக உயர்த்திய போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திரும்ப ஒப்படைத்ததால், அமைச்சகம் அதை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று வேளாண்மை அமைச்சகத்தின் அறிக்கை காட்டுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க: Agriculture Ministry surrendered one lakh crore of its its budget in last 5 years

2022-2023 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் ஒரு பார்வைஎன்ற தலைப்பிலான அறிக்கையின்படி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை (DA&FW) கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2022 – மார்ச் 2023) ஆண்டுக்கான வருடாந்திர ஒதுக்கீடான ரூ.1.24 லட்சம் கோடியில் ரூ.21,005.13 கோடியை திரும்ப ஒப்படைத்தது. இது முந்தைய 2021-22 ஆம் ஆண்டில் துறையால் திருப்பி ஒப்படைத்த தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும், முந்தைய ஆண்டு 1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 5,152.6 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

2020-21ல் ரூ.23,824.53 கோடியும், 2019-20ல் ரூ.34,517.7 கோடியும், 2018-19ல் ரூ.21,043.75 கோடியும் வேளாண்மை அமைச்சகத்தால் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் வரும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, 2022-23ல் அதன் மொத்த ஒதுக்கீடான ரூ.8,658.91 கோடியில் ரூ.9 லட்சத்தை சரண்டர் செய்துள்ளது. மேலும் 2021-22ல் ரூ.1.81 கோடியும், 2020-21ல் ரூ.600 கோடியும், 2019-20ல் ரூ.232.62 கோடியும், 2018-2019ல் ரூ.7.9 கோடியும் சரண்டர் செய்துள்ளது.

2018-19 நிதியாண்டில் பிரதமர் கிசான் சம்மன் நிதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதன் மூலம், வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள இரு துறைகளின் ஒருங்கிணைந்த பட்ஜெட் 2018-19ல் ரூ.54,000 கோடியிலிருந்து (அல்லது மையத்தின் மொத்த பட்ஜெட் ரூ.24.42 லட்சம் கோடியில் 2.3%) ரூ.1.32 லட்சம் கோடியாக (அல்லது 2022-23ல் மொத்த ரூ.39.44 லட்சம் கோடியில் 3.5%) அதிகரித்துள்ளது.

இத்திட்டத்தின் ஆண்டு ஒதுக்கீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.20,000 கோடி முதல் ரூ.75,000 கோடி வரை உள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம், 2022-23ல் 1.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்த அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீட்டை 2023-24 நிதியாண்டில் 1.25 லட்சம் கோடியாகக் குறைத்தது, ஒருவேளை நிதி பயன்படுத்தப்படாததால் இருக்கலாம்.

விவசாய அமைச்சகத்தின் நிதி ஒப்படைப்பு விவகாரம், பி.சி காடிகவுடர் தலைமையிலான விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றின் நிலைக்குழுவால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் குழு நிதியை சரண்டர் செய்யும் "நடைமுறையை" "தவிர்க்க" அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.

மார்ச் 13, 2023 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கை (2023-24) குழு அறிக்கை கூறியது: “... நிதியை ஒப்படைப்பது முக்கியமாக NES (வடகிழக்கு மாநிலங்கள்), SCSP (பட்டியல் சாதி துணைத் திட்டம்) மற்றும் பழங்குடியினர் பகுதி துணைத் திட்டம் (TASP) ஆகியவற்றின் கீழ் தேவை குறைவாக இருப்பதால், ஏற்படுகிறது”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Central Government Agriculture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment