scorecardresearch

மே 5-ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது: ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

மே 5-ம் தேதி புத்த பூர்ணிமாயொட்டி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

JIPMER hospital
JIPMER hospital

மே 5-ம் தேதி புத்த பூர்ணிமாயொட்டி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மே-5-ம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமாவை யொட்டி மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து இதையடுத்து வரும் 5-ம் தேதி புதுவை ஜிப்மரில் வெளிப்பற நோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே 5-ம் தேதி வெளிப்புற நோயாளிகள் வருவதை தவிர்க்கவேண்டும் என்றும் அவசர பிரிவு சேவை அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ahead of buddha purnima op closed on may 5 says hospital administration