பி.எஃப்.ஐ என்னும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சங்பரிவார் அமைப்புகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பரப்புரை செய்தன.
2007 இல் உருவான போதும் அதன்பின்னர் 2013ஆம் ஆண்டிலும் பி.எஃப் குறித்த தனது நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வெளிப்படையாக அறிவித்தன.
இந்த நிலையில், 2013ஆம் ஆண்டு சங்பரிவார் அமைப்புகள் தென்மாநிலங்களில் வளர்ந்துவரும் பயங்கரவாதமயமாக்கல் என பி.எஃப்.ஐ-யை விமர்சித்தது.
குறிப்பாக இந்த இயக்கம் கேரளத்தில் செழித்து வளர்ந்தது. சிமி இயக்கம் மீதான தடை விதிப்புக்கு பின்னர் பி.எஃப்.ஐ., கேரளத்தில் வலுவான அமைப்பாக காணப்பட்டது.
அப்போதிலிருந்து சங்பரிவார் அமைப்புகள் பி.எஃப்.ஐ மீது ஒரு கண் வைத்தன. இந்து தலைவர்கள் பஜ்ரங்தள் தொண்டர்கள் தாக்கப்பட்டபோதும் கொல்லப்பட்டபோதும் பின்னால் பி.எஃப்.ஐ இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக இந்துத்துவ அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பத்திரிகையான ஆர்னனைஸரில் தலையங்கம் ஒன்று வெளியானது. அதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இணைந்து இந்து விரோத அரசியலில் ஈடுபடுகின்றனர்.
அன்றைய கிலாபத் இயக்கம்போன்று நாட்டை பிளவுப்படுத்தல் தொடர்கிறது எனக் கூறியது. இந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் PFI மீது ED மற்றும் NIA நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து, ஆர்கனைஸர் நாளேட்டின் ஆசிரியர் கேட்கர் மற்றொரு தலையங்கத்தை எழுதினார்,
அப்போது இதுபோன்ற சோதனைகள் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதைத் தடுக்க நீண்ட தூரம் செல்லும். இந்தச் சோதனைகளை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து, “சில மாதங்களுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்கள் பற்றிய முக்கியமான மற்றும் தனிப்பட்ட தகவல்களை பயங்கரவாதிகளுக்கு அளித்ததற்காக கேரள போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கேரள காவல்துறையில் இஸ்லாமிய கும்பல் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையின் பின்னணியில், குஜராத்தில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், "அரசு இயந்திரத்தில் நுழைவதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் விரிவான திட்டங்கள்" என்ற பிரச்சினையை RSS எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
நவம்பர், 2021 கட்டுரையில் “கேரளாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், JIH, PFI, Mujahid போன்றவை இந்தியாவின் முதன்மையான மத்திய பல்கலைக்கழகங்கள், IIT, மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றில் தங்கள் சமூக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றன எனக் கூறப்பட்டது.
இந்த மாணவர்கள் சிஏஏ போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியது என்றும் கட்டுரையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் 2022ஆம் ஆண்டு பஜ்ரங்தளம் தொண்டர் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னால் பி.எஃப்.ஐ இருப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜூன், 16 அன்று, பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி ஆகியவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி, "ஜிகாதி வன்முறைகள், அட்டூழியங்கள், துன்புறுத்தல்களை" தூண்டும் "பிஎஃப்ஐ மற்றும் தப்லிகி ஜமாத் போன்ற அமைப்புகளை" தடை செய்யக் கோரி அறிக்கைகளை சமர்ப்பித்தன.
2021 டிசம்பரில், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கேரள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கடிதம் எழுதினார்.
SDPI மற்றும் PFI இன் செயல்பாட்டாளர்களால் 22 RSS மற்றும் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கடிதத்தில் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil