State-bank-of-india | Electoral Bonds: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒட்டி, கடந்த மாதத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ ) இந்தியா முழுதும் சுமார் 1,148.38 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பத்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் அவ்வப்போது விற்பனை செய்யப்படும். இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளில் இந்த பத்திரங்கள் கிடைக்கும்.
இந்திய குடிமகனாக உள்ள யாரும் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவோ பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். சட்டசபை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற, பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த பத்திரங்களை பெற முடியும். அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள தங்களது கணக்கில் இந்த பத்திரங்களை செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ள இயலும். இத்திட்டத்தில் நன்கொடை அளித்தவர் யார் என்றே தெரியாது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ahead of elections, SBI sold Rs 1,148 cr in bonds
அமோக விற்பனை - ஆர்.டி.ஐ தகவல்
இந்நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் இம்மாதம் 9ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அக்டோபரில் பாரத ஸ்டேட் வங்கி (ஸ்டேட் பாங்க் ஆஃப்) இந்தியா முழுதும் சுமார் 1,148.38 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது. என்றும், அதிகபட்சமாக ஐதராபாத் கிளையில் (33 சதவீதம்) விற்பனையாகி உள்ளது என்றும் ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் கே பாத்ரா என்பவரின் ஆர்.டி.ஐ கேள்விக்கு (தகவல் அறியும் உரிமை) பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்களின் 28வது தவணை அக்டோபர் 4 முதல் 14 வரை விற்பனைக்கு வந்த நிலையில், அதே நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை அக்டோபர் 9 அன்று அறிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ள தரவுகளின்படி, அதன் ஐதராபாத் கிளை 377.63 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது. இது மொத்த விற்பனையில் சுமார் 33 சதவீதமாக உள்ளது.
ஆனால், இந்தப் பத்திரங்களை செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ளவதற்கான நேரம் வந்தபோது, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ரூ.83.63 கோடியை (7 சதவீதம்) மட்டும் எடுத்துக்கொண்டுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/9773E9K5apg8zt6GjHih.jpg)
தற்போது 25 அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளவதற்காக கணக்குகளைத் திறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் விற்பனையில், ஐதராபாத்தை அடுத்து கொல்கத்தா (ரூ. 255.28 கோடி), மும்பை (ரூ. 177.90 கோடி), டெல்லி (ரூ. 130.68 கோடி) மற்றும் சென்னை (ரூ. 95.50 கோடி) ஆகிய கிளைகள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கியின் டெல்லி கிளையில், தேசிய கட்சிகள் தங்கள் கணக்குகளை வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான அனைத்து தேர்தல் பத்திரங்களும் ரூ. 800 கோடி அல்லது 70 சதவீதம் அளவில் பணமாக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா (ரூ. 171.28 கோடி), ஐதராபாத், மும்பை (ரூ. 39 கோடி) மற்றும் பாட்னா (25 கோடி) கிளைகள் பணப் பட்டுவாடா செய்வதில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
தேர்தல் பத்திரங்கள் ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி ஆகிய மதிப்புகளில் கிடைக்கின்றன என்றாலும், மிகப் பெரிய மதிப்பிலானது தேர்தல் பத்திரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. சமீபத்திய தவணையில், பாரத ஸ்டேட் வங்கி 2,012 தனிப்பட்ட தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்டவை (1,095) ரூ. 1 கோடி மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“