Advertisment

இந்திய ராணுவம் வெளியேற மார்ச் 10 காலக்கெடு: விமான தளத்தை தொடர்ந்து இயக்க மாலத்தீவு சென்றது பணியாளர்கள் குழு

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற மார்ச் 10 காலக்கெடு; அதற்கு முன்னதாக விமானத் தளத்தை தொடர்ந்து இயக்க இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் குழு மாலத்தீவு சென்றது

author-image
WebDesk
New Update
maldives muizzu

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸூ (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Shubhajit Roy

Advertisment

மார்ச் 10 ஆம் தேதி முதல் தொகுதி இராணுவ வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, விமான தளங்களை இயக்கும் "இந்திய தொழில்நுட்ப பணியாளர்களின்" முதல் குழு மாலத்தீவை அடைந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Ahead of March 10 deadline: Civilians’ team reaches Maldives to take over ops from military personnel

மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை பிற்பகுதியில், இந்திய பணியாளர்களின் முதல் குழு வந்துவிட்டதாகவும், நாட்டின் தெற்கே உள்ள அட்டூவில் ஹெலிகாப்டரை இயக்கும் என்றும் கூறியது.

இரண்டு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டபடி, அட்டூவில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவ வீரர்கள் மார்ச் 10 ஆம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமைக்குள் இந்தியாவிலிருந்து மாற்று ஹெலிகாப்டர் வரும் என்றும், அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பயிற்சி செயல்முறைகளை பணியாளர்கள் குழு தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி, மாலத்தீவில் இருந்து இந்தியா தனது இராணுவ வீரர்களை மார்ச் மற்றும் மே மாதங்களில் திரும்பப் பெறுவது என்று இரு நாடுகளும் முடிவு செய்தன.

வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பிப்ரவரி 8 அன்று, "தற்போதைய பணியாளர்கள் திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்களால் மாற்றப்படுவார்கள்" என்று கூறினார்.

இந்த பணியாளர்கள் மாலத்தீவில் இரண்டு ஹெலிகாப்டர்களையும் ஒரு டோர்னியர் விமானத்தையும் தொடர்ந்து இயக்குவார்கள்.

பிப்ரவரி 2 அன்று புதுதில்லியில் நடந்த இந்தியா மற்றும் மாலத்தீவு அதிகாரிகளுக்கு இடையேயான உயர்மட்ட மையக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் இருந்து இது முக்கிய அம்சமாகும்.

அந்த நேரத்தில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சக அறிக்கை, “இந்திய அரசு மூன்று விமான தளங்களில் ஒன்றில் ராணுவ வீரர்களை 2024 மார்ச் 10 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளவும், மற்ற இரண்டு தளங்களில் உள்ள ராணுவ வீரர்களை மே 10, 2024க்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்,” என்று கூறுகிறது.

வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை, ஆனால் இரு தரப்பினரும் இந்திய விமான தளங்களை தொடர்ந்து இயக்குவதற்கு பரஸ்பரம் செயல்படக்கூடிய தீர்வுகளின் தொகுப்பை ஒப்புக்கொண்டனர்என்று கூறியது, இது மாலதீவு மக்களுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ அவசர சேவைகளை வழங்குகிறது.

இந்த தளங்களை இயக்க சுமார் 80 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 14 அன்று, முக்கிய குழுவின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு அரசாங்கம் இந்தியா தனது இராணுவ வீரர்களை நாட்டிலிருந்து திரும்பப் பெற மார்ச் 15 காலக்கெடுவை நிர்ணயித்தது.

மாலத்தீவு மருத்துவ அவசர சேவைகளின் உயிர்நாடியான இந்த மூன்று தளங்களையும் தொடர்ந்து இயக்குவதற்கு இரு தரப்பும் பணியாற்றியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா வெளியேறுஎன்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இந்திய ராணுவ வீரர்களின் இந்த விலகல் மூலம், தனது முழக்கத்தை நிறைவேற்றுகிறார் என பார்க்கப்படுகிறது.

டிசம்பரில் துபாயில் நடந்த COP28 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முகமது முய்ஸு இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பும் முக்கிய குழுவை அமைக்க முடிவு செய்தன.

நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனேயே, சீனா சார்புத் தலைவராகப் பரவலாக அறியப்பட்ட முகமது முய்ஸு, இந்தியா தனது இராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு முறைப்படி வேண்டுகோள் விடுத்தார்.

மாலத்தீவில் இருந்து இந்திய இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதாக உறுதியளித்த பின்னர், இப்ராஹிம் முகமது சோலிஹ்வை பதவி நீக்கம் செய்து, ஜனாதிபதி தேர்தலில் முகமது முய்ஸு வெற்றி பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India maldives
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment