பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற இடமாக புதுச்சேரி விளங்குகிறது. இங்கு விலை குறைவு,விதவிதமான மது வகைகள்,வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுச்சேரி நோக்கி இழுக்கிறது.
Advertisment
இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபான கடைகள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகின்றன. பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளன. உள் அமைப்புகள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மதுவகைகள் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.
குறிப்பாக ஜப்பானில் இருந்து விஸ்கி,மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயன், இத்தாலி பீர், நியூயார்க் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி காத்திருக்கிறது மதுபிரியர்களை வரவேற்று வருகின்றன. மது வகைகளுக்கு ஏற்ப சைடிஷ்களும் புது விதமாக தயாராகியுள்ளன. கடற்கரையை ஒட்டிய பகுதியாக புதுச்சேரி இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகளை சிறப்பு சலுகைகளுடன் வழங்க தயாராகி வருகிறது.
வெளிநாட்டில் விற்பனைக்காக வந்துள்ள மதுபானங்கள்
புதுச்சேரியில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளன. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து களத்தில் இறக்கப்பட்டுள்ள மேலும் 50 மதுவகைகளும் சைடிஸ்களும் சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
2023 புத்தாண்டை ஒட்டி மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து நட்சத்திர ஹோட்டல்களும் ரெஸ்டாரண்டுகளும் மற்றும் அனைத்து ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/