ட்ரம்ப் வருகை: சரிந்து விழுந்த மொடேரா மைதான வாயில் வீடியோ
சிறப்பு போலீஸ் கமிஷனர் அஜய் தோமர்: புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது நுழைவு வாயில் சரிந்தது. இது ஒரு பெரிய சம்பவம் அல்ல. இதில் யாரும் காயமடையவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்திற்கு வருகை தந்து, மொடேரா பகுதியில் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி வைக்கிறார்.
Advertisment
இந்நிலையில்,நேற்று மைதனாத்தின் வெளியே தற்காலிகமாக நிறுவப்பட்ட வி.வி.ஐ.பி நுழைவு வாயில் சரிந்து விழுந்தது. அதிவேக காற்றின் காரணமாக நுழைவு வாயில் சரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் எதேர்ச்சையாக படம் பிடித்தார். வெல்டட் ஸ்டீல் கம்பிகளால் உருவாக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலில் பிளக்ஸ் பேனர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்குப் பிறகு, மைதானத்தின் பிரதான நுழைவாயிலின் அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு தற்காலிக வாயில் கட்டமைப்பின் ஒரு பகுதி காற்றின் காரணமாக சரிந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Entry gate at Motera stadium collapses ahead of #TrumpIndiaVisit
புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது (வி.வி.ஐ.பி) நுழைவு வாயில் சரிந்தது. இது ஒரு பெரிய சம்பவம் அல்ல. இதில் யாரும் காயமடையவில்லை ”என்று குற்றப்பிரிவின் சிறப்பு போலீஸ் கமிஷனர் அஜய் தோமர் கூறினார்.
அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மோட்டேரா பகுதியில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளனர்.
49,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய பழைய மைதானத்தை இடித்துவிட்டு,1.10 லட்சம் பார்வையாளர்களை தங்க வைக்கும் திறன் கொணட உலகின் மிகப்பெரிய மைதானமாக இது கட்டப்பட்டுள்ளது.