81 வயது முதியவரை போல நடித்த 32 வயது இளைஞர் - டில்லி ஏர்போர்ட்டில் கைது
Delhi airport : அமெரிக்க வேலைவாய்ப்பு கனவில், குஜராத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் 81 வயது முதியவர் வேடம் பூண்டநிலையில், டில்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi airport : அமெரிக்க வேலைவாய்ப்பு கனவில், குஜராத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் 81 வயது முதியவர் வேடம் பூண்டநிலையில், டில்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு கனவில், குஜராத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் 81 வயது முதியவர் வேடம் பூண்டநிலையில், டில்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜெயேஷ் படேல் ( வயது 32). இவருக்கு அமெரிக்காவில் வேலைபார்த்து அதிகம் சம்பாதித்து வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. இதற்காக, என்ன செய்வது என்று யோசிக்கும்போது தான் அவருக்கு பரத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அமெரிக்க வேலைக்கு பரத் உதவுவதாகவும், இதற்காக, தனக்கு ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று ஒப்பந்தம் இருவரிடையேயும் ஏற்பட்டது. இதன்படி, டில்லி ஹோட்டலில் தங்கியிருந்த ஜெயேஷ் படேலுக்கு 81 வயது முதியவர் போன்ற மேக்அப் போடப்பட்டது. முதியவர் கேரக்டருக்கு அம்ரிக் சிங் என்று பெயர் வைக்கப்பட்டு, அந்த பெயரிலேயே விசாவும் பெறப்பட்டிருந்தது.
அமெரிக்கா செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயேஷ் என்ற அம்ரிக் சிங், டில்லி சர்வதேச விமானநிலையம் வந்தார். முதற்கட்ட பாதுகாப்பு சோதனைகளை வெற்றிகரமாக கடந்த அவர், அடுத்ததாக குடியேற்றத்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்காக காத்திருந்தார். அப்போது அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் நடைபெறவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
Advertisment
Advertisements
அவர்கள் நடத்திய சோதனையில், ஜெயேஷ் படேல் உண்மையை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரின் குரலில் இருந்த கம்பீரம், அவரது செயல்களில் இருந்த நடவடிக்கை உள்ளிட்டவையே, அவர் மீது சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்தன. அவரது முகத்தில் இருந்த சுருக்கங்கள் செயற்கைத்தனமாக இருந்ததும் கண்டறியப்பட்டதாக மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எப்) செய்தித்தொடர்பாளர் ஹேமேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜெயேஷ் படேல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முதியவர் தோற்றம் போன்று மேக் அப் போட்ட ஒப்பனை கலைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயேஷிற்கு உதவி செய்துவந்த ஏஜென்ட் பரத் குறித்த விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.