அரசு நடத்தும் பெங்களூரு மின் வாரிய நிறுவனம் (பெஸ்காம்) கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்குகிறது. இது தற்போது ஒரு செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முறைக்கு மாறியுள்ளது.
பெஸ்காம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) மருத்துவ நுண்ணறிவு மற்றும் மொழி பொறியியல் (அல்லது MILE) ஆய்வகத்துடன், ஒரே நேரத்தில் 500 க்கும் அழைப்புகள் பெறக்கூடிய AI அடிப்படையிலான புகாரளிக்கும் முறையை உருவாக்க இணைந்துள்ளது.
"எங்களிடம் இருக்கும் தொழில்நுட்பம், இயந்திரத்திற்கு யாராவது அழைக்கும் போது, அழைப்பவர்கள் என்ன பேசினாலும் அதை புரிந்து கொள்வது மட்டுமின்றி, அவர்கள் கன்னடத்தில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசினாலும் புரிந்து கொள்ளும் தன்மையுடையது. இது புகாரையும் புரிந்து கொள்ளும். அது பில் <பற்றியதாக இருந்தாலும், கரண்ட் குறித்த புகார் என்றாலும், சூரிய ஆற்றலுக்கான சலுகை என்று எதுவாக இருந்தாலும், செர்வரில் இருந்து பதிலைக் கண்டுபிடித்து விடும். அந்த பதிலை எழுத்து வடிவிற்கு மாற்றி, பின்னர் பேச்சு வடிவுக்கு கொண்டு வந்து பதில் அளிக்கும்" என்று IISc MILEன் தலைவர் ஏ ஜி ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
"இந்த முறை எழுத்தை பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும். இது சேவையை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையாற்றவும் உதவுகிறது. இந்த முறை மூலம், 250 வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பேசுவார்கள், மேலும் 250 வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
ஒரு வாடிக்கையாளர் இந்த சாதனத்துடனான தொடர்புகளின் போது விரக்தியடைவதை கணினி உணர்ந்தால், உடனே கணினி அல்லாத மனித உதவிக்கு புகார்களை மாற்றுவதற்கான அம்சம் AI அமைப்பில் இருக்கும் என்று பெஸ்காமின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் தலைவர் அனில் டிசோசா கூறியுள்ளார்.
வாடிக்கையாளர் தொடர்புகளுக்காக பெஸ்காம் AI முறைக்கு நகர்ந்ததன் மூலம், பல மொழிகள், கிளைமொழிகள், உச்சரிப்பு என்று எதுவாயினும் இயற்கை மொழி செயலாக்கத்துடன் சூழலை விளக்கும் திறன்; கேள்வியின் நோக்கத்தை அடையாளம் காணும் திறன்; கற்றுக் கொள்ளும் திறன், பயிற்சி பெறும் திறன் என அனைத்தும் குறைந்த செலவில் செய்ய முடிகிறது.
பெஸ்காம் அதிகாரிகளின் கூற்றுப்படி, AI அமைப்பு எதிர்காலத்தில் புகார்தாரர்களுக்கு முதன்மை வழியாக இருக்கும், அதே நேரத்தில் மனித உதவிகள் இரண்டாம் நிலை விருப்பமாக இருக்கும். இந்த முறை கன்னடம் மற்றும் ஆங்கில மொழி அங்கீகார அம்சங்களுடன் தொடங்கி, பின்னர் பிற இந்திய மொழிகளையும் உள்ளடக்கும்.
பெஸ்காம் ஒரு புதுமையான தீர்வைக் கண்டறிவது இது முதல் முறை அல்ல. கடந்த காலத்தில், சர்வதேச ஒத்துழைப்புக்காக ஜப்பான் வங்கியிடமிருந்து ரூ .417 கோடி நிதியுதவியுடன் தனது மின் வலையமைப்பை மேம்படுத்துவதற்கான நிகழ்நேர விநியோக ஆட்டோமேஷன் முறையை அறிமுகப்படுத்தியது. விநியோகிக்கப்பட்ட ஆட்டோமேஷன் அமைப்பு "பெங்களூரு நகரில் 11 கே.வி. நெட்வொர்க்கின் தொலைநிலை கண்காணிப்பு, கட்டுப்பாடு பணியை" செயல்படுத்துகிறது.
பெஸ்காம் ஒரு முதல் முயற்சி அடிப்படையில், ஒரு Smart Grid நெட்வொர்க்கைத் தொடங்கியுள்ளது, இது மின்சாரம் வழங்க அனுமதிப்பது மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாக திறமையான, நிலையான மின்சக்தி அமைப்புக்கு குறைந்த இழப்புகள் மற்றும் வழங்கல் மற்றும் பாதுகாப்பின் உயர் தரம் மற்றும் பாதுகாப்பு" போன்றவற்றை மேம்படுத்தவும் உதவுகிறது.