புதுச்சேரி அமைச்சரவையில் இந்த 2 ஆண்டுகாலத்தில் சரியான முறையில் செயல்படாமல் சுயநலத்தோடு செயல்படும் அமைச்சர்களை இனம் கண்டு, அமைச்சரவையில் தேவையான மாற்றத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொண்டுவர வேண்டும்.” என அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த அரசாக இருந்தாலும் தனது தேர்தல் கால அறிவிப்புகளையும், பட்ஜெட் அறிவிப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது கடமையாகும். அந்த வகையில் புதுவை முதல அமைச்சர் ரங்கசாமி கடந்த கால திமுக காங்கிரஸ் இருண்ட ஆட்சியின் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட மக்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் இந்த 2 ஆண்டுகாலத்தில் முடித்து வைத்துள்ளார்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நான்கெசடட் அதிகாரிகளுக்கு பிற்படுத்தப்பட.ட்டோர் இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்.ராஜஸ்தானை தவிர்த்து எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதுவையில் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 வழங்கப்படும் என அறிவித்தள்ளார்.
கடந்த ஆட்சியில் மலிவு விளம்பரத்திற்காக திமுக காங்கிரஸ் கூட்டணி முதல அமைச்சராக இருந்த நாராயணசாமி கவர்னருடன் மோதல் போக்கில் ஈடுபட்டு மாநில வளர்ச்சியை அதல பாதாளத்திற்கு தள்ளினார். அது ஒரு இருண்டு கால ஆட்சியாகும்.இந்த 2 ஆண்டில் அந்த இருண்ட காலத்தில் இருந்து மாநில வளர்ச்சியை மாற்றி இருளை நீக்கி ஒரு ஒளியை ஏற்றியுள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளே இல்லாத அரசை எங்களது முதலமைச்சர் உருவாக்கியுள்ளார. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என் அ.தி.மு.க-வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் இதுபற்றி பேசவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும் வாய் திறக்கவில்லை.
முதல அமைச்சர் அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்களது அரசுக்கு கவர்னர் தமிழிசை முழு ஒத்துழைப்பு அளித்து உறுதுணையாக இருக்க வேண்டும்.அரசின் நல்ல திட்டங்களுக்க துணை நிற்காமல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை முதல அமைச்சர் ரங்கசாமி எடுக்க வேண்டும்.
அதே போன்று, அமைச்சரவையில் இந்த 2 ஆண்டுகாலத்தில் சரியான முறையில் செயல்படாமல் சுயநலத்தோடு செயல்படும் அமைச்சர்களை இனம் கண்டு அமைச்சரவையில் தேவையான மாற்றத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொண்டுவர வேண்டும்.” இவ்வாறு அன்பழகன் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“