வாக்குக்கு பாஜக பணம் கொடுத்ததாக அதிமுக கூறும் புகாரை நிரூபிக்க வேண்டும் என அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நமச்சிவாயம், “புதுவையில் அமைதியாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். தோ்தல் நடந்து முடிந்த நிலையில், காரைக்கால் பாஜகவினா், கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளேன்.
வெற்றி வாய்ப்பு புதுவையில் பிரகாசமாக உள்ளது. வெற்றி பெற்றதும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இலவச அரிசி ரேஷன் கடை மூலம் தரப்படும்.
காரைக்கால் மருத்துவமனை மேம்பாடு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை எம்.பி. என்ற முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன். புதுவை மாநிலத்தின் அனைத்துப் பிராந்திய வளா்ச்சிக்கு பாடுபடுவேன்.
புதுவையில் பாஜக வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அதிமுக ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுவை மாநில அந்தஸ்து குறித்து ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.
மத்திய அரசுடன் பேசி அனைத்துக்கட்ட முயற்சிகளும் எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன், “புதுச்சேரியில் காங்கிரஸும், பாஜகவும ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.
அப்போது, “பணம் கொடுப்பது சட்டத்திற்கு விரோதமானது என்ற அச்ச உணர்வு கூட இல்லாமல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பாஜகவினர் நோட்டீஸ் கொடுப்பது போல் 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“