Advertisment

தமிழகத்தில் இருந்து எரிசாராயம் கடத்தப்பட்டு புதுச்சேரியில் தயாரிப்பு: அ.தி.மு.க. குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இருந்து எரிசாராயம் கடத்தப்பட்டு, புதுச்சேரியில் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படுகிறது என அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK has alleged that fake liquor is being brewed in Puducherry

Spurious Liquor

புதுவை மாநில அதிமுக செயலர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு எரிசாராயம் கடத்தப்பட்டு சிலரின் துணையோடு போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டிலில் சரக்கு ஏற்றப்படுகிறது.

Advertisment

இதனால் புதுவை, தமிழக அரசுகளுக்கும் வருமானம் இல்லை. இதில் தமிழக மற்றும் புதுவை அரசுகளின் கலால், காவல் துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசு மட்டுமின்றி புதுவை அரசும் ஓர் காரணம். மது கடத்தல் தொடர்பாக புதுவை அரசிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுவையில் இருந்து போலி மதுபானம் கடத்தலை தமிழக காவல்துறை பிடித்தாலும் புதுவை கலால்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் புதுவைக்கு எரிசாராயத்தை கொண்டு வரமுடியாது. 2 மாநில அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை கலால்துறை பாதுகாக்கிறதா.? என்ற கேள்வி எழுகிறது.

இதில் சம்பந்தப்பட்டோரின் சொத்து பறிமுதல் செய்து நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். கலால் துறையில் அதிக காவல்துறையினரை நியமிக்க வேண்டும்.” என்றார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment