scorecardresearch

மு.க. ஸ்டாலினால் எடப்பாடி உயிருக்கு ஆபத்து.. புதுச்சேரி அ.தி.மு.க. குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் குற்றஞ்சாட்டினார்.

AIADMK protests in Puducherry against the filing of a case against Edappadi Palaniswami

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப போட்ட தமிழக அரசை கண்டித்தும் உடனடியாக அந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சேரி அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி என்பவர் சாதாரண ஆள் இல்லை. அவர், 1.5 கோடி தொண்டர்களுக்கு தலைவராக இருக்கக்கூடியவர்.
அது மட்டும் இல்லாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சரான அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசே அவர் மீது திட்டமிட்டு பொய் வழக்கை போட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினால் அவரின் உயிருக்கு ஆபத்துள்ளது ” என்றார்.

தொடர்ந்து, “திமுகவின் பி டீமான ஓபிஎஸ்யும் டிடிவி தினகரன் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டெடுத்த எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டு அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “எடப்பாடியார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றும் அன்பழகன் எச்சரித்தார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Aiadmk protests in puducherry against the filing of a case against edappadi palaniswami