மருத்துவப் படிப்பில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு கோரி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 500-கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 500-கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வழங்கப்படுவது போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என்று கூறி அதிமுகவின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசி அன்பழகன், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருதி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் புதுச்சேரி அரசு 7.5% உள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக கடந்த ஆண்டே அ.தி.மு.க-வின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"