படிப்படியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி- எய்ம்ஸ் இயக்குனர்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தேவை

பெரும்பான்மை மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் அதே நேரத்தில் இளம் வயதினருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட வேண்டும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 3ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை இயக்குநர் ரன்தீப் குலேரியா, “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால் ஒரு பில்லியன் மக்களுக்கு தேவைப்படும். அப்படி கணக்கிடும் போது இரண்டு பில்லியன் டோஸ்கள் தேவைப்படும். தற்போதைய சூழலில் அவ்வளவு எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை பெறுவது சாத்தியமற்றது. நம்மிடையே இருக்கும் கொரோனா தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு பகிரிந்தளிக்கப்போகிறோம் என்பதே சவாலானது.இப்போது நாம் செய்ய வேண்டியது எவ்வளவு பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகிறார்கள் என்பதை கணக்கிட்டு குறைந்த வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அனுமதிக்கலாம். தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் குறைந்த வயதுடைய பலரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தகுதி வாய்ந்த முதியவர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராமல் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி பல இடங்களில் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. அதிலும் பல மாநிலங்களில் இன்னும் கூட சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 தடுப்பூசி போடும் மையங்கள் அமைந்துள்ளது. சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேர் வீதம் மொத்தமாக 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். முதல் நாளான வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 996 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிடும் என எதிர்பார்த்தோம். இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் இதுவே 10 நாட்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்தால் மக்களிடம் சுனக்கம் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே அந்த தருணத்தில் குறைந்த வயதுடையோரை தடுப்பூசி போட்டுக்கொள்ள நாம் அனுமதிக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நோயாளிகளை நேரடியாக கவனிக்கும் சுகாதார பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் . எங்கள் மருத்துவமனையில் உள்ள தகவல்களை பார்க்கும்போது, 50 சதவீத சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.பொதுமக்களை விட சுகாதார பணியாளர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிகம் தயக்கம் இருப்பதை உணர முடிகிறது.
சுகாதாரப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். நோயாளிகளின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி எடுத்துக்கொள்ள சுகாதார பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiims chief says can gradually open vaccination to lower age groups

Next Story
கொரோனாவை தடுக்க “தீவிரம் காட்டும்” மாநில அரசுகள்; 11 மாநிலங்கள் குறித்து மத்திய அரசு கவலைStates start moving to contain surge, Centre says 11 States/ UTs are of ‘grave concern’
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com