கொரோனா நோய்க்கு எதிரான முதல் இந்திய தடுப்பூசியான கோவாக்சின் மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள ஆர்வம் தெரிவித்தவர்களில், 20% பேர் கொரோனா நோய்க் கிருமிக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எய்ம்ஸ் மருத்துவ பரிசோதனையில் கலந்துகொள்ள
விருப்பமுள்ளவர்களை சேர்க்கத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 80-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள திரையிடப்பட்டதாகவும், அதில் 16 பேர் மட்டுமே பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான 100 பேரிடம் கோவாக்சின் மருந்து கொடுக்கப்பட்டு, குறைந்தது இரண்டு வாரங்கள் கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இல்லாத 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே ஆய்வுக்கு தகுதியானவர்கள். நிராகரிப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 20% தன்னார்வலர்களிடம், ஆன்டிபாடிகளைக் கண்டறிந்துள்ளோம். அவர்கள் கொரோனா பெருந்தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது. மீதமுள்ளவர்களுக்கு உகந்த கல்லீரல் அல்லது சிறுநீரக செயல்பாடு இல்லை ”என்று கோவாக்சின் மனிதப் பரிசோதனையை கண்காணிக்கும் மூத்த எயம்ஸ் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
"கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், மனித நோயெதிர்ப்பு மண்டலம் ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது . எனவே, ஆன்டிபாடிகளை உருவாக்கியவர்களிடம் தடுப்பூசியின் தாக்கத்தை ஆய்வு செய்வது கடினம்" என்று மருத்துவர் கூறினார்.
கோவாக்சின் மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள இதுவரை 3,500 க்கும் மேற்பட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 24 அன்று, 30 வயது தன்னார்வாலர் ஒருவருக்கு, முதன்முறையாக, 0.5 மில்லி கோவாக்சின் மருந்து நிர்வகிக்கப்பட்டது. ஒரு வாரம் முடிவுற்ற நிலையில், இதுவரை எந்த அசவுகரியத்தையும் அவர் வெளிபடுத்தவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வரும் கண்காணிக்கப்பட்டு, இரண்டாவது பரிசோதனைக்காக கோவாக்சின் மருந்து மீண்டும் செலுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
கோவாக்சின் மருந்தியக்கப் பரிசோதனைகளின் முதல் இரண்டு கட்டத்தை (randomized, blinded, two arms, active comparator-controlled clinical trial ) மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் ஒன்றாக டெல்லி எய்ம்ஸ் உள்ளது.
முதல் கட்ட மருந்தியக்கப் பரிசோதனையில், 375 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி நிர்வகிக்கப்படுகிறது. அவர்களில் அதிகபட்சம் 100 பேர் எய்ம்ஸில் இருப்பார்கள். இரண்டாவது கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 12 நிறுவனங்களிலும் சுமார் 750 தன்னார்வலர்களுக்கு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.
புனேவைச் சேர்ந்த ICMR நிறுவனம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR நிறுவனமான செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் போன்ற நிறுவனங்களிலிருந்து வரும் முதன்மை அறிவியல் உள்ளீடுகள் மூலம், ஆறு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகின்றன. இரண்டு இந்தியத் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil