அறுவை சிகிச்சைக்கு பணம் வாங்கிய எய்ம்ஸ் மருத்துவர்: விசாரணையில் கண்டுபிடிப்பு.. இட மாற்றம்

அறுவை சிகிச்சைக்காக நோயாளியின் தந்தையிடம் மருத்துவர் பணம் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்காக நோயாளியின் தந்தையிடம் மருத்துவர் பணம் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
அறுவை சிகிச்சைக்கு பணம் வாங்கிய எய்ம்ஸ் மருத்துவர்: விசாரணையில் கண்டுபிடிப்பு.. இட மாற்றம்

எய்ம்ஸ் மருத்துவர் கே.கே ராய், நோயாளியின் அறுவை சிகிச்சைக்காக அவரின் தந்தையிடம் ரூ. 34,000 பணம் பெற்றதாக கூறப்படும் புகாரில் முகாந்திரம் இருப்பதாக உண்மை கண்டறியும் குழுவின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜாஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

நோயாளியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இவ்விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணையில், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் கே.கே ராய்க்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. 2 உதவியாளர்கள், புகார்தாரர், ஒரு நோயாளி ஆகியோரிடம் விசாரணையில் மேற்கொள்ளப்பட்டதில் புகாரில் உண்மை தன்மை உள்ளது என்று ஆகஸ்ட் 26 தேதியிடப்பட்ட குழுவின் அறிக்கை கூறுகிறது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டுக்குள்ளான எய்ம்ஸ் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறை பேராசிரியர் மருத்துவர் கே.கே ராய் கூறுகையில், "என்னால் எந்தக் கருத்தையும் கூற முடியாது. விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவதற்குள் ஊடகங்களில் செய்தி வருவதை விரும்பவில்லை. என் மீதான குற்றச்சாட்டு தவறு. எதாவது ஆதாரம் இருக்க வேண்டும்" என்றார்.

குழு அறிக்கையின்படி, மருத்துவர் நோயாளியின் தந்தையிடம் ரூ. 34,000 கேட்டதாக கூறப்படுகிறது. விற்பனையாளரிடமிருந்து மருந்து பொருட்கள் வாங்க வேண்டும் என காரணம் காட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவர் அலுவலக அறையில் விற்பனையாளரை வைத்து பணம் பெற்றதாக தெரிகிறது.

Advertisment
Advertisements

அதே மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரியும் நோயாளியின் தந்தை, மருத்துவர் முன்னிலையில் விற்பனையாளரிடம் ரூ.30,000 கொடுத்துள்ளார். பின்னர், மருத்துவரிடம் நேரடியாக ரூ.4,000 கொடுத்ததாக கூறப்படுகிறது. "பணம் ரொக்கமாக செலுத்தப்பட்டது, அதற்கான ரசீது எதுவும் கொடுக்கப்படவில்லை" என்று அறிக்கை கூறுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய நோயாளியின் தந்தை, "மருத்துவர் எனது மகளின் உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மருத்துவர் கேட்ட பணத்தை விருப்பத்துடன் கொடுத்தேன். எனது மூத்த மகளின் திருமணத்திற்காக நான் அந்த பணத்தை சேமித்தேன், ஆனால் அதை எனது இரண்டாவது மகளின் சிகிச்சைக்காக கொடுத்தேன்" என்று கூறினார்.

மருத்துவர் தனது மகளின் உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மருத்துவர் அவரிடம் கேட்டதாகக் கூறப்படும் பணத்தை விருப்பத்துடன் கொடுத்ததாகவும் கூறினார். எனது மூத்த மகளின் திருமணத்திற்காக நான் அந்த பணத்தை சேமித்தேன், ஆனால் அதை எனது இளைய மகளின் சிகிச்சைக்காக கொடுத்தேன்," என்று அவர் கூறினார்.

நோயாளிகளிடமிருந்து பணம் வாங்குவதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். "நான் இதை எனது சக ஊழியர்களிடம் கூறினேன், அவர்கள் மருத்துவருக்கு எதிராக புகார் அளிக்க சொன்னார்கள்" என்றார்.

அவரின் புகாரைத் தொடர்ந்து, மருத்துவர் சுனில் சம்பர், மருத்துவர் ராஜீவ் குமார், மருத்துவர் நிருபம் மதன், மருத்துவர் மணீஷ் சிங்கால் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இன்னும் சில நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு விசாரணை குழு அமைக்கப்படும் என்றார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா, மகளிர் மருத்துவத் துறையின் தலைவர் மருத்துவர் நீர்ஜா பட்லா மற்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகியோரிடம் இது குறித்து கேட்ட தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் எல்லா பொருட்களும் கிடைக்கிறது. வெளியில் இருந்து பொருட்கள் வாங்குவது அரிது. அப்படியே வாங்கினாலும் அது அரசின் பணியாளர் சுகாதாரத் திட்டம் கீழ் வரும். இருப்பினும் மருத்துவர் கே.கே ராய் வெளி நபர் மூலமாக மருந்து பொருள் வாங்க கூறியிருக்கிறார் என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: