AIIMS MBBS Results 2018: 2018ம் ஆண்டின் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் இணைந்து படிப்பதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்தத் தேர்வு முடிவுகளை எய்ம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களில் முடிவுகளை aiimsexams.org என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 26 மற்றும் 27ம் தேதிகள் நடைபெற்றது. இந்த AIIMS MBBS நுழைவுத் தேர்வு முடிவை மாணவர்கள் எய்ம்ஸ் இணையதளம் தவிர மற்ற எய்ம்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் பார்க்கலாம். இன்று வெளியாகும் எய்ம்ஸ் எண்டிரன்ஸ் முடிவுகள் அனைத்தும் தரவரிசை வாரியாகவும் ரோல் நம்பர் வாரியாகவும் அறிவிக்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு முடிவின் அறிவிப்பிற்குப் பிறகு, தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குக் கலந்தாய்வு தொடங்கப்படும்.
AIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வை எங்கு எப்படிப் பார்க்கலாம்:
1. aiimsexams.org இணையத்தளத்தில் காணலாம்.
2. குறிப்பிடப்பட்ட லிங்கில், "MBBS Entrance Exam Results 2018" என்பதை கிளிக் செய்யவும்.
3. புதிய பக்கம் தோன்றும். அதில் உங்களின் ரோல் நம்பர், பிறந்த நாள் விவரங்களைப் பதிவு செய்யவும்.
4. உங்களின் தேர்ச்சி குறித்த தகவல் வெளியாகும். அதனை டவுன்லோடு செய்வது அவசியம்.
5. முக்கியமாக, அய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
AIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு வெளியாகியுள்ளது. மெஹக் அரோரா என்ற பெண் இந்த தேர்வில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். ஜிப்மர் தேர்வில் 14வது இடமும், நீட் தேர்வில் 31வது இடமும் பெற்று தேர்ச்சி பெற்றவர் இவர்.
இந்த வெற்றியை மேஹக் அரோரா தனது குடும்பத்துடன் கொண்டாடினார்.
பெரும்பாலான மாணவர்கள் இதில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடுகின்றனர்.
தேர்வு முடிவுகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு, ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி முதல் தொடங்குகிறது. 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.