மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கதவை மூடும் நேரத்தில் நடந்த விபத்து:
ஏர் இந்தியா விமான சேவை சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வதைதொடர் கதையாக வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
53 வயதான அந்த பணிப்பெண் விமானத்திலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து டெல்லிக்குக் கிளம்ப தயாரான ஏர் இந்தியா விமானத்தை கதவை அடைக்க சென்ற விமானப் பணிப்பெண் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழந்தார்.
அவரின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் மற்ற விமான பணிப்பெண்கள் ஒடிச் சென்று அவரை மீட்டனர். பின்பு,உடனடியாக அந்த பணிப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுக்குறித்து சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இந்நிலையில்,இதுத் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா விமானம், ”ஹர்ஷா லோபோ என்கின்ற எங்கள் குழு பணிப் பெண் கீழே விழுந்துள்ளார். அவருக்கு மருத்துவமனைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது, மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.