அசைவ உணவை பரிமாறிய விமான பணிப்பெண்ணுக்கு கன்னத்தில் பலார் விட்ட அதிகாரி!

இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மூத்த அதிகாரி ஒருவர், அந்த விமான பணிப்பெண்னை அழைத்து

இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மூத்த அதிகாரி ஒருவர், அந்த விமான பணிப்பெண்னை அழைத்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அசைவ உணவை பரிமாறிய விமான பணிப்பெண்ணுக்கு கன்னத்தில் பலார் விட்ட  அதிகாரி!

ஏர் இந்தியா விமானத்தில் சைவ உணவிற்கு பதிலாக, அசைவ உணவை பரிமாறி விமான பணிப்பெண் மூத்த அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

Advertisment

ஏர் இந்தியா விமானம் வானில் பறக்கும் போது   இதுவரை ஏகப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக அதில் பணிபுரியும் விமான பணிப்பெண்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள்  எழுந்துள்ளன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.

டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தற்போது கடுமையான விமர்சனத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதில் பயனித்த்க பயணி ஒருவர், அங்குள்ள விமானி பணிப்பெண்ணிடம் சைவ உணவை வழங்கும்படி  கேட்டுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணோ மறதியில், அவரின் முன் அசைவ உணவை வைத்துள்ளார். இதனால், கோபமடைந்த பயணி அந்த பெண்னை திட்டி, சைவ உணவை கொண்டு வரப்படியும் கூறியுள்ளார். இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த  மூத்த அதிகாரி ஒருவர், அந்த விமான பணிப்பெண்னை அழைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். அத்துடன், அந்த பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

Advertisment
Advertisements

இதனால் மனமுடைந்த விமான பணிப்பெண் அந்த இடத்திலேயே அழுதுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இதை நேரில் பார்த்த சக பயணிகள் சிலரும் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களி;ல் கடுமையாக பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது பணிப்பெண்ணை அறைந்த மூத்த அதிகாரி   விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

 

Air India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: