பைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா
இன்று பகல் 12:30 மணிக்கு ரஷ்யா செல்ல இருந்த விமானம் டெல்லி திரும்பிய நிலையில் வேறொரு விமானம் மாஸ்கோவிற்கு இந்தியர்களை அழைக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Air India Delhi-Moscow flight called back after pilot found corona positive : உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய அரசு. ஏர் இந்தியா விமானங்கள் மூலமாக அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Advertisment
டெல்லியில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்ற ஏர்பஸ் ஏ-320 நியோ விமானம் டெல்லியில் இருந்து கிளம்பி உஸ்பெகிஸ்தானை அடைந்த போது, அந்த விமானிகள் குழுவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த சூழலில் உடனே அந்த விமானம் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டது.
விமான போக்குவரத்து துவங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருடைய டெஸ்ட் ரிப்போர்ட் தவறுதலாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் சென்ற விமான பணிக் குழு தற்போது குவாரண்டைனில் இருக்கின்றனர். இன்று பகல் 12:30 மணிக்கு ரஷ்யா செல்ல இருந்த விமானம் டெல்லி திரும்பிய நிலையில் வேறொரு விமானம் மாஸ்கோவிற்கு இந்தியர்களை அழைக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட விமான குழு உறுப்பினர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் பயணம் உறுதி செய்யப்படுகிறது. இந்த சோதனை முடிவுகள் தற்போது எக்ஸல் ஷீட்டில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.