Kerala Air India Express Flight Accident: கேரள விமான விபத்தில் நள்ளிரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 17 ஆனது. தொடர்ந்து காயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துபாயில் இருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
விபத்து நடந்த இடத்தில் புகை இருந்ததாகவும், விமானம் இரண்டு பகுதிகளாகப் உடைந்திருப்பதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
டி.ஜி.சி.ஏ வட்டாரங்கள் சார்பில், “விமானம் ஓடுபாதையை ஓவர்ஷாட் செய்து, ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது. தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா B737 விமானத்தில்,
174 பயணிகள்
10 கைக்குழந்தைகள்
2 விமானிகள் மற்றும்
5 கேபின் குழுவினர்
இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளது.
கேரள விமான விபத்து தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என மோடி உறுதி அளித்துள்ளார்.
கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடனே செல்ல பேரிடர் மேலாண்மை குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
விபத்து குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்தில் ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருந்தார்.
ஆனால், சிறிது நேராத்தில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் 123 பேர் காயமடைந்திருப்பதாகவும், 15 பேர் படுகாயமடைந்திருப்பதாக மலப்புரம் காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரள விமான விபத்து - உதவி எண் அறிவிப்பு
விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் குறித்து 0495 - 2376901-ல் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணித்துள்ளனர் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil