/tamil-ie/media/media_files/uploads/2018/04/flight-window-breaks.jpg)
அம்ரித்சரில் இருந்து தில்லி நோக்கி ஏர் இந்திய விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது நடு வானில், திடீரென அந்த விமானத்தின் ஜன்னல் தனியாக உடைந்தது. இதனால் அதி வேகமாகக் கற்று விமானத்தின் உள்ளே சீறிப் பாய்ந்தது. விமானத்தின் உள்ளே வேகமான காற்று உள்ளே நுழைந்ததால், சற்று நேரத்திற்கு அந்த விமானம் வேகமாக நடு வானில் கட்டுப்பாட்டை இழந்து அசைந்தது. பிறகு விமானத்தில் உள்ள பணிப்பெண் ஒருவர், தனியாக உடைந்த ஜன்னல் மீண்டும் சரியாக பொருத்தினார். இதன் பிறகு காற்று உள்ளே வராமல் தடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 3 பயணிகள் காயம் அடைந்ததில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனே 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த விசாரணை துவங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
,
#WATCH Air India flight from Amritsar to Delhi experienced severe turbulence and three passengers sustained minor injuries. A window panel also fell off. DGCA begins probe (19.4.18) pic.twitter.com/WBp0v56oTy
— ANI (@ANI) April 22, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.