ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

விமான பணியாளர்களிடம் புகார் அளித்த போது, வேறு இருக்கை மாற்றி தர மறுத்துவிட்டனர்.

ஏர் இந்திய விமானம் மூலம்  மும்பை வந்த பெண் ஒருவர் மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்டதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏர் இந்தியா விமானம் மற்ற விமான சேவைகளை விட சொகுசு விமானம் என்ற  பெயரை பெற்றிருந்தது. ஆனால் பெண் ஒருவர் சமீபத்தில்வெளியிட்ட தகவல்  பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க் நகரில் இருந்து மும்பைக்கு  ஏர் இந்தியா விமானத்தில்  சவும்யா ஷெட்டி என்ற பெண் தனது பிள்ளைகளுடன் பயணம் செய்துள்ளார்.

‛பிஸினஸ் கிளாஸ்’ வகுப்பில் பயணம் செய்த இந்த பெண்ணை மூட்டை பூச்சிகள் கடித்துள்ளனர். இதனால் அவரின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தனது நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

இதுக்குறித்து சவும்யா ஷெட்டி  கூறியதாவது,” ஏர்  இந்தியாவின் பிஸினஸ் கிளாஸ் வகுப்பில் நான் பயணித்த போது  மூட்டைப்பூச்சியின் தொல்லை அதிகமாக இருந்தது. மூட்டை பூச்சி கடித்ததில் தனது முழங்கை முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டது. வேதனை தாங்கமுடியாமல் விமான பணியாளர்களிடம் புகார் அளித்த போது, வேறு இருக்கை மாற்றி தர மறுத்துவிட்டனர். இதனால், வேறு வழியின்றி அதே இருக்கையில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது ” என்று கூறியுள்ளார்.

சவும்யா ஷெட்டியின் இந்த போஸ்ட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.   ஏர் இந்தியாவில் பயணித்த மற்ற பயணிகளும்  அவர்களின் சேவை குறித்து  பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ளஏர் இந்தியா நிறுவனம் யணிக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து  வருந்துவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்  கூறியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close