263 நபர்களின் உயிரும் உங்கள் கையில் தான்… அழைப்பை ஏற்று உடனே பணிக்கு சென்ற ஸ்வாதி!

இவரின் இந்த துணிச்சலான செயல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்!

By: March 25, 2020, 2:23:44 PM

Air India Piolt Swati Ravel rescued the stranded Indians from Italy : கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியுள்ள நாடான இத்தாலியில் பல இந்தியர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். அங்கிருக்கும் இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரும் முக்கிய பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது.

Air India Piolt Swati Ravel rescued the stranded Indians from Italy ஸ்வாதியுடன் விமானத்தை இயக்கிய இதர விமானிகள்!

இந்நிலையில் 263 நபர்களை இத்தாலியின் ரோமில் இருந்து மீட்டு வரும் முக்கிய பொறுப்பினை 22 பேர் கொண்ட குழுவிடம் இந்திய அரசு அளித்தது. இந்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் தான் ஸ்வாதி ராவல். இத்தாலியில் இருந்த 263 இந்திய மாணவர்களை மீட்பதற்காக சென்ற ஏர் இந்தியா போயிங் விமானத்தை இயக்கிய ஸ்வாதி அந்த விமானத்தின் பைலட் ஆவார்.  அவருடன் கேப்டன் ராஜா சோஹான், சந்தீப் ப்ரார், ப்ரதீக் ஷர்மா ஆகியோரும் இந்த விமானத்தை இயக்கினர்.

Air India Piolt Swati Ravel rescued the stranded Indians from Italy இத்தாலியில் சிக்கித் தவித்த மாணவர்களை மீக்க சென்ற 22 பேர் அடங்கிய
விமானக் குழு

ஏர் இந்தியாவில் 2006ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஸ்வாதி ராவலுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்திய விமானப்படையில் இணைந்து போர் விமானத்தை இயக்க வேண்டும் என்பது தான் ராவலின் ஆசை. ஆனால், அப்போது இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் கிடையாது என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது நாட்டுக்காக இவர் செய்துள்ள சேவை, இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இவர்களின் இந்த தீர செயலை பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

சில நேரங்களில் மக்கள் தங்கள் உயிரைக் காக்க போராடும் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரின் அரிய செயல்களை பெரிதும் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் இது போன்ற இக்கட்டான சூழலில் உயிரையும் பணையம் வைத்து இவர்கள் தான் நம் அனைவரின் உயிர் காக்கும் தெய்வங்களாக இருக்கின்றார்கள்.

மேலும் படிக்க : இது போன்ற சூழலில் இப்படித்தான் பொறுப்பே இல்லாம நடந்துக்குவீங்களா – எரிச்சலான அகமதாபாத் ஏர்போர்ட்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Air india piolt swati ravel rescued the stranded indians from italy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X