பணிக்கு சேர்ந்த 2 வருடத்தில் மரணம்... நீங்கா துயரத்தில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் விமானப் பணிப்பெண் குடும்பத்தினர்

அகமதாபாத் விமான விபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் விமான பெண் பணியாளர் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 19 வயதில் பணிக்கு சேர்ந்த நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் 21 வயதில் இறந்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் விமான பெண் பணியாளர் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 19 வயதில் பணிக்கு சேர்ந்த நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் 21 வயதில் இறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Air India plane crash ahmedabad manipur woman crew Nganthoi Sharma Kongbrailatpam Grief strikes family Tamil News

அகமதாபாத் விமான விபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் விமான பெண் பணியாளர் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 19 வயதில் பணிக்கு சேர்ந்த நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் 21 வயதில் இறந்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை மதியம் 1.38 மணிக்கு 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் ஒன்று லண்டன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

Advertisment

அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனேடிய நாட்டவர் விமானத்தில் இருந்தனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் மட்டும் உயிர்தப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்க்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருந்துள்ளன. இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மருத்துவ மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி இருந்த நிலையில், அங்கிருந்த மருத்துவ மாணவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர், குறைந்தது ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு, மாநில முதல்வர்கள் மற்றும் உலக நாட்டின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினர்கள் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வருகிறார். 

இளம் விமானப் பணிப்பெண் மரணம் 

இந்நிலையில், இந்த கோர விமான விபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் விமான பெண் பணியாளர் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் தௌபல் நகரைச் சேர்ந்தவர் 21 வயதான நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின். இவர் தனக்கு 19 வயதாக இருக்கும் ஏர் இந்தியாவில் விமானப் பணிப்பெண்ணாகச் சேர்ந்துள்ளார். அவரின் இறப்பு செய்தி கேட்டு குடும்பத்தினர்  உடைந்து போயுள்ளனர். 

தனது மகளை வாடும் தந்தை நந்தேஷ் குமார் சர்மா பேசுகையில், "நந்தோய் சர்மா காலை 11:30 மணியளவில் தனது மூத்த சகோதரிக்கு போன் செய்து, தான் லண்டனுக்குப் பயணம் செய்வதாகக் கூறினார். அதனால், அடுத்த சில நாட்களுக்கு தன்னால் போன் செய்ய முடியாது என்றும், ஜூன் 15 அன்று திரும்பிய பிறகு தொடர்பு கொள்வேன் என்றும் அவர் கூறினார். அதுவே எங்களிடம் பேசிய கடைசி போனாக அமைந்தது. 

சுமார் மூன்று மணி நேரம் கழித்து, விமானம் விபத்துக்குள்ளானதாக எனது மூத்த மகள் தனது தொலைபேசியில் செய்திகளைப் பார்த்ததும் பீதியில் என்னை அழைத்தார். அந்த விமானத்திற்குள் அவள் இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் ஏர் இந்தியாவிலிருந்தோ அல்லது எந்த பிரதிநிதியிடமிருந்தோ எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. செய்தி மற்றும் பேஸ்புக்கில் இருந்து மட்டுமே எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

மூன்று மகள்களுக்கு நடுவில் பிறந்த நந்தோய் சர்மா, 2023 ஆம் ஆண்டு டீனேஜராக இருந்தபோது ஏர் இந்தியாவில் தனது முதல் வேலையில் சேர்ந்துள்ளார். அவரது பணியின் காரணமாக, மும்பையில் ஏர் இந்தியாவில் பணிபுரியும் மணிப்பூரைச் சேர்ந்த இளம் பெண்கள் குழுவுடன் அவர் வசித்து வந்துள்ளார். 

"நந்தோய் இம்பாலில் உள்ள டி.எம் கல்லூரியில் தனது முதல் செமஸ்டர் தேர்வை எழுதியிருந்தாள். அவளுடைய சில தோழிகள் விமானப் பணிப்பெண்களாகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நேர்காணலுக்குச் சென்றபோது, ​​அவளையும் அழைத்து வந்தார்கள். அவள் சென்று இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவள் மிகவும் இளமையாக இருந்தாள், ஆனால் அவளுக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். அவள் பெரியவளானதும், மணிப்பூரில் ஏதாவது நிலையான வேலையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன். 

இந்த வருடம் மார்ச் மாதம் தான் அவள் கடைசியாக வீட்டிற்கு வந்ததார். நான் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென வீட்டுக்கு வந்து எங்களை பார்த்து விட்டு சென்றார். அவள் ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கினாள். அவள் எப்போதும் அப்படித்தான் எங்களைப் பார்ப்பாள். வேலைக்கு சில நாட்கள் விடுமுறை கிடைக்கும்போது அவள் எங்களை ஆச்சரியப்படுத்துவாள். அவள் தன் அக்காவுடன் வருகையைத் திட்டமிடுவாள், அவள் முன் வாயிலை அடைந்ததும் எங்களை அழைப்பாள். அவள் எங்கள் அனைவரையும் நன்றாகக் கவனித்துக் கொண்டாள், ”என்று தந்தை நந்தேஷ் குமார் சர்மா கூறினார்.

Ahmedabad airplane

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: