ஏர் இந்தியா ஊழல்: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஏர் இந்தியா விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் ,அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

INX media case supreme court hearing today highlights
INX media case supreme court hearing today highlights

ED summons Chidambaram for interrogation: ஏர் இந்தியா விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

2007 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனங்களுக்காக ஏர் பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் முதல் கட்ட விசாணையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. அப்போது, விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேல் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, ப,சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுதான் விமானங்களை வாங்கியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்கு 23 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Air india scam ed summons chidambaram for interrogation

Next Story
மாநிலங்களவை உறுப்பினரானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்Former PM Manmohan Singh elected unopposed
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express