Advertisment

ஹெலிகாப்டர் விபத்து: ஏர் மார்ஷல் தலைமையில் முப்படை விசாரணை தொடங்கியது!

ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பாதுகாப்பு வீரர்கள் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர் மார்ஷல் மனிதேந்திர சிங் தலைமையில் இந்திய விமானப்படை, முப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
ஹெலிகாப்டர் விபத்து: ஏர் மார்ஷல் தலைமையில் முப்படை விசாரணை தொடங்கியது!

தமிழகத்தின் நீலகிரி அருகே, காட்டேரி-நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி  உள்பட 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வியாழக்கிழமை உரையாற்றினார்.

Advertisment

அப்போது பேசிய அவர்; ஜெனரல் ராவத் மற்றும் பிறரை ஏற்றிச் சென்ற IAF Mi-17V5 ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் சூலூர் IAF நிலையத்தில் இருந்து காலை 11.48 மணியளவில் புறப்பட்டு, உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டனில் உள்ள DSSC இல் மதியம் 12:15 மணிக்கு தரையிறங்க இருந்தது.

இந்த சூழலில், சூலூரில் உள்ள ஏடிசி மதியம் 12:08 மணியளவில் ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்தது. பின்னர், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர் நிர்வாகம் மீட்புக் குழுவை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியது, அவர்கள் உயிர் பிழைத்தவர்களை வெளியேற்ற முயன்றனர். காயமடைந்தவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டரில் 14 பேர் இருந்ததனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் மற்ற ராணுவ வீரர்களின் இறுதி சடங்குகள் உரிய ராணுவ மரியாதையுடன் செய்யப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருடன் இருக்கும், IAF குரூப் கேப்டன் வருண் சிங்-கிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏர் மார்ஷல் மனிதேந்திர சிங் தலைமையில் இந்திய விமானப்படை, முப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை காலை, இந்திய விமானப் படையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிளாக் பாக்ஸின் ஃப்ளைட் ரெக்கார்டரைக் கண்டுபிடித்து மீட்டெடுத்தது.

பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் விரிவுரை ஆற்றுவதற்காக செல்லும் வழியில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் குறைந்த பார்வைத் திறன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ராணுவத் தளபதி, ஆறு ஆண்டுகளுக்கு முன், 2015ல், இந்திய ராணுவத்தில், லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றிய போது, ​​ஹெலிகாப்டர் விபத்தில், உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment