புதுச்சேரியில் கடந்த தீபாவளியை விட 4 மடங்கு காற்று மாசு தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது உருவாகும் காற்று மாசு மற்றும் ஒலி மாசுபாட்டின் அளவை கண்டறிய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய தினம் மற்றும் தீபாவளியன்று புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காற்று மற்றும் ஒலி மாசு அளவு கண்காணிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த தீபாவளியான கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று, மூலக்குளம் மற்றும் முதலியார்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு கண்காணிக்கும் பணி நடந்தது. இதேபோல், காரைக்கால் கோவில்பத்து பகுதியிலும் கண்காணிக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது பதிவான காற்று மாசுபாட்டை விட தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒலி மாசுபாடும் 10 சதவீதம் அதிகமாக பதிவகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக காற்றின் மாசு 4 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“