கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலோட்டை, விமானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலோட், ஏர் ஏசியா விமனம் I5-972 மூலம் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் பயணிக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில் இந்த விமானம் மதியம் 2.05 மணிக்கு புறப்பட இருந்தது. இந்நிலையில் கர்நாடக ஆளுநர் மதியம் 1.50 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஓய்வெடுக்கும் அறையில் சிறிது நேரம் செலவிட்ட பிறகு, விமானத்தில் ஏற சென்றுள்ளார். ஆனால் விமான நிலைய ஊழியர்கள் அவரை விமானத்தினுள் அனுமதிக்கவில்லை. விமானத்தின் கதவுகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கார்நாடக ஆளுநர் மாளிகை இந்திய விமானநிலையத்தின் ஆணையத்திற்கும், கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கும், ஏர் ஏசியாவிற்கும் கடிதம் எழுதி உள்ளது. ஆளுநர் பயணிக்கும் விமானம் புறப்பட 15 நிமிடங்களுக்கு முன்பாகவே, அவர் விமான நிலையம் வந்துள்ளதாகவும், இருப்பினும் அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபோன்று முதல் முறையாக நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2.05 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தை அவர் தவறவிட்டதால், அடுத்த 90 நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு செல்லும் அடுத்த விமானத்தில் அவர் பயணத்தை மேற்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“