ஏர்செல் – மேக்சிஸ் வழக்கினை விசாரிக்கும் அதிகாரி மேல் சொத்துக்குவிப்பு வழக்கு!

அவர் ஏர்செல் - மேக்சிஸ் விசாரணையைத்  தொடர வேண்டுமா வேண்டாமா என்பதனை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

By: June 27, 2018, 7:35:22 PM

அமலாக்கத்துறை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா வேண்டாமா என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கும் ராஜேஷ்வர் சிங் பற்றி குறிப்பிடுகையில்,  “அவர் விசாரித்துவரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கினை மேற்கொண்டு அவர் நடத்த வேண்டுமா என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்” என்று விசாரணை நடத்திய அமர்வு கூறியிருக்கின்றது.

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சகம், யாரையும் எந்தவொரு வழக்கிலிருந்தும்  காப்பாற்ற நினைக்கவில்லை ஆனால், ராஜேஷ்வர், இந்தியாவின் மிக முக்கிய ஊழல் வழக்கான 2ஜி ஸ்பெக்ட்ரத்துடன் தொடர்புடையதால் அவருடைய வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தில் கொள்ளப்படுகின்றது.

“இங்கு அனைவரின் புகார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் ஒரு சாதாரண அதிகாரி தான். எக்காரணம் கொண்டும் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படமாட்டாது” என்று விசாரணை நடத்திய நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அருண் மிஷ்ரா மற்றும் எஸ்.கே. கவுல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கினை விசாரித்து வருகின்றது. இப்புகாரினை அளித்த கபூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், இவ்விசாரணை தொடர்பான முடிவினை ஜூன் 27ம் தேதி அறிவிக்கின்றோம் என்று கூறியிருந்தது. ஆனால் இன்று விசாரணைக்கு வருவதற்கு முன்பே, மத்திய அமைச்சகம் நீதிபதிகளிடம் இது குறித்து பேசியிருக்கின்றது தெரிய வந்திருக்கின்றது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உங்களை குற்றவாளி என்று தீர்மானிப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் குற்றத்தில் ஈடுபட்டீர்களா இல்லையா என்பதை விசாரிக்க வேண்டிய பொறுப்பில் மட்டுமே நாங்கள் இருக்கின்றோம். மேலும் நீங்கள் ஒரு அரசு அதிகாரி என்பதற்காக உங்களுக்கு எந்த வகையான சலுகையினையும் அளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மார்ச் 12ம் தேதி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கின்றது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Aircel maxis case centre to decide whether ed officer facing corruption allegations should continue probe says sc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X