பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜூலை 12ம் தேதி ஐஸ்வர்யா ராய்,ஆராத்யா இருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், ஜெயா பச்சன், அமிதாப் - ஜெயா பச்சன் தம்பதியின் மகள் ஸ்வேதா பச்சன், அவரின் குழந்தைகள் அக்ஸ்த்யா நந்தா, நவ்யா நவேலி நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
Advertisment
Advertisements
அமிதாப், அபிஷேக் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா, ஆராத்யா இருவரும் கடந்த ஐந்து நாட்களாக தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 17) நள்ளிரவு ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் சிகிச்சைக்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Mumbai: Actor Aishwarya Rai Bachchan admitted at Nanavati Hospital. Earlier, she was home quarantined after she tested positive for #COVID19. (File pic) pic.twitter.com/KIhw7OsgHc
முன்னதாக, நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில்“ டி 3590. கோவிட் பாசிட்டிவ் சோதனை செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் …. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். முடிவுகள் காத்திருக்கின்றன …. கடந்த 10 நாட்களில் என்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!” என்று பதிவு செய்தார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, அபிஷேக் பச்சன் தனது ட்விட்டரில், “எனக்கும், எனது தந்தைக்கும் கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டது . லேசான அறிகுறிகள் இருப்பதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம்.குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்று பதிவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news