பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.
ஐஸ்வர்யா, பிஹார் மாநிலத்தில் யாதவ் சமூகத்தில் இருந்து வந்த முதலாவது முதலமைச்சர் தராகோ ராயின் பேத்தியும் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராயின் மகளும் ஆவர். தேஜ் பிரதாப் - ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம் வரும் 18-ம் தேதி பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது,
அதே போல் திருமணம் மே 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவுக்கிஉ ஒரு சகோதரி, ஒரு சகோதரர் உள்ளனர். பாட்னாவில் உள்ள நோட்ரி டேம் அகாடெமியில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா ராய் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர்.
இந்த திருமணத்தில் தேஜ் பிரதாப் யாதவ் மூன்று முக்கியமான கட்டுப்பாடுகளை வித்துள்ளாராம். வரதட்சணை பெற மாட்டேன் வழங்கவும் மாட்டேன், திருமணம் முடிந்ததும் உடல் உறுப்பு தானத்தில் கையெழுத்திடுவேன், எந்தவிதமான சாதி மறுப்பு திருமணத்திற்கும் எதிராக நிற்கமாட்டேன். இந்த 3 கட்டுபாடுகளை மறக்காமல் கடைப்பிடிப்பாராம்.
இந்த திருமணம் குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில்,”இந்த திருமணத்துக்கான முறைப்படியான அறிவிப்பை இரு வீட்டாரும் வெளியாடுவார்கள். எனக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் என் தந்தை சிறையில் இருப்பது மனவேதனையை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் இந்த திருமணம் குறித்து கூறுகையில்,”திருமணத்திற்காக லாலு பிரசாத் யாதவை ஜாமீனில் எடுக்க முயற்சிப்போம். ஜாமீன் கிடைக்காவிட்டால், பரோலில் வெளியே கொண்டு வருவவும் முயற்சி செய்வோம். எங்களின் தலைவர் சிறையில் இருக்கும் போது, இந்த திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தவே அனைவரும் விரும்புகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
திருமணம் நடைபெறும் நேரத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.