Advertisment

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்... தேசிய அளவில் 93வது இடம்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்று மாடலிங்கில் புகழ் அடைய வேண்டும் என்று மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ஷேயோரன்.

author-image
WebDesk
New Update
Aishwarya Sheoran, Miss India finalist scored 93rd rank in Civil Services exams

Aishwarya Sheoran, Miss India finalist scored 93rd rank in Civil Services exams :  04ம் தேதி 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. தேசிய அளவில் 7ம் இடம் பிடித்து தமிழக மாணவர் அசத்தினார். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்களின் பின்னணி நம்மை பிரமிக்க வைக்கிறது.  மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் முதன்முறை எழுதிய தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் அல்லாமல் தேசிய அளவில் 93ம் இடம் பிடித்துள்ளார் அவர்.

Advertisment

மேலும் படிக்க : பார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை… சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி!

ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஐஸ்வர்யா டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். பிறகு இந்தூரில் முதுகலை பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த அவர் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். மாடலிங்கில் ஜொலித்து வந்தாலும் கூட சிவில் சர்வீஸ் எழுதி அரசு பணிக்கு வரவேண்டும் என்பது அவருக்கு கனவாக இருந்தது. இதனால் 10 மாதங்களாக இந்த தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். கோச்சிங் செண்டர் சென்று பயிற்சிகள் ஏதும் எடுக்காமல் வீட்டில் இருந்தே படித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் அவரின் உழைப்பிற்கான பலனை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க : Success… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive

உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்று மாடலிங்கில் புகழ் அடைய வேண்டும் என்று மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ஷியோரன். 2016ம் ஆண்டு இறுதி போட்டி வரை பங்கேற்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Upsc Results
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment