அஜித் பவாரின் செயலால், தனது 50 ஆண்டுகால பெரும் பின்னடைவை சரத் பவார் சந்தித்துள்ளார். ஏனெனில் சரத் பவார் மிகச்சிறந்த அரசியல் ஞானி.
2014 மக்களவை தேர்தலை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய காரணமாக திகழும் நபர்களில் முக்கியமானவராக காணப்படுகிறார்.
தற்போது அவரின் கட்சியில் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அஜித் பவாரை ஆதரிக்கின்றனர். இந்த நிலையில், இன்று அஜித் பவார் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் (அஜித் பவார்) எதிர்க்கட்சித் தலைவர். அவர் கூட்டம் கூட்டுவதற்கு முழு தகுதி உள்ளது. ஆனால் அவரின் திட்டங்கள் குறித்து எனக்கு தெரியாது” என்றார்.
ஆனால் மாலை செய்தியாளர்கள் சந்திப்பில், “இன்று எழுதப்பட்ட அத்தியாயம் பலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு புதிதில்லை.
மகாராஷ்டிரா மக்களும் இளைஞர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் எங்கள் தொண்டர்களை போராட்டக் களத்துக்கு செல்லுங்கள் எனச் சொல்ல மாட்டோம்.
மாறாக மக்களை சந்தியுங்கள் எனச் சொல்வோம். தேசியவாத காங்கிரஸ் பாரதிய ஜனதா கொள்கையை அனுமதிக்காது.
கட்சியின் கொள்கையை மீறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். இதற்காக அவர்கள் கவலைப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பவார், “இரண்டு நாட்களுக்கு முன், பிரதமர் (நரேந்திர மோடி) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை என்சிபி மற்றும் காங்கிரஸுக்கு எதிரானது. அப்போது அவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டார். ஊழலில் என்சிபி ஈடுபட்டுள்ளது என்றார்.
மாநில கூட்டுறவு வங்கி குறித்தும் குறிப்பிட்டார். நீர்ப்பாசனம் தொடர்பான புகார் குறித்தும் அவர் குறிப்பிட்டார். என்சிபியின் சில உறுப்பினர்களை அவர் அரசாங்கத்தில் சேர்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதாவது அவர் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து அனைவரையும் விடுவித்துள்ளார். இதற்காக நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
மேலும், ஜூலை 6 ஆம் தேதி சில முக்கிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த முடிவு செய்திருப்பதாக பவார் கூறினார்.
இதற்கிடையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) என்சிபியின் உயரிய தலைவர்களில் ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றவர்களில் ஒருவருமான சாகன் புஜ்பால், 2024-ல் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பவார் சாகேப் சமீபத்தில் எங்களிடம் தெரிவித்தார் என்றார்.
இந்த நிலையில் இது ஏக்நாத் ஷிண்டே அரசை பாதுகாக்கும் முயற்சி என சஞ்சய் ராவத் (உத்தவ் பாலாசாகேப்) கட்சி எம்.பி கூறினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வரும். அதனால் ஏக்நாத் ஷிண்டே அரசை பாதுகாக்கும் முயற்சியாக இதனை செய்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து, அரசாங்கம் நிலையற்றதாக மாறும், எனவே இந்த புதிய ஆதரவு (என்சிபி எம்எல்ஏக்கள்) எடுக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஜின் (அரசாங்கத்தின்) பழுதடைவதால், மற்றொரு இன்ஜின் (அஜித் பவார் வடிவத்தில்) இணைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஷிண்டே விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார். அவர் முதல்வர் பதவியை இழப்பார், விரைவில் மாநிலத்திற்கு புதிய முதல்வர் வருவார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.