அரப்பிக் கடலில் நிலை கொண்டுள்ள, பிபோர்ஜாய் புயல் பாகிஸ்தான் அருகே கரையை கடக்கும் என்று கருதப்பட்டது, இந்நிலையில் இது கிழக்கு திசையில் நகர்ந்து, வடக்கு குஜராத் கடற்பகுதிக்கு செல்கிறது. ஜூன் 15ம் தேதி கரையை கடக்கிறது.
இந்த புயலால் 2 முதல் 3 மீட்டர்வரை கடலில் அலைகள் வீசும், ஓட்டு வீடுங்கள், குடிசை வீடுகள் காற்றால் சேதமடையும், சாலைகள் வெள்ளம் சூழும், பயிர்கள் நீரில் மூழ்கும், ரயில் பாதை பாதிக்கப்படும், மின்சார இணைப்புகள் காற்றால் பாதிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் வடக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிபோர்ஜாய் ஏற்கனவே அதிதீவிர புயலாக மாறிவிட்டது. வலிமையை வைத்து பார்க்கும்போது, இது 2ம் இடத்தில் உள்ளது. நேற்று மாலையில் மும்பை மேற்கு திசையிலிருந்து 540 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
“ ஜூன் 14ம் தேதி காலை வரையில் இந்த புயல் வடக்கு திசையில், நகரும். தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையில் சென்று, சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியை கடக்கும். மேலும் குஜராத்தின் மந்திவி மற்றும் பாகிஸ்தானின் கராச்சியில் ஜூன்15ம் தேதி மதியம், புயல் கரையை கடக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிபோர்ஜாய் புயலில் முதலில் குஜராத்தை தவிர்த்துவிட்டு, பாகிஸ்தான் கடற்பகுதிக்கு செல்லும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் தற்போது திசை மாறியுள்ளது.
அரபிக் கடலில் உருவாகும், புயல்கள் பொதுவாக இந்திய கடற்கரைக்கு வருவதில்லை. அரபிக் கடலில் உருவாகும், 75 % புயல்கள் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும். இதைவைத்து பார்க்கும்போது இந்த புயல் பாகிஸ்தான், இரான் அல்லது ஓமன் வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும். 25 சதவிகிதத்திற்கும் குறைவான புயல் மட்டுமே வடகிழக்கில் நகந்து குஜராத் கடல் பகுதிக்கு செல்லும்.
கடலில் இருக்கும்போது காற்றின் வேகம் 165 கி.மீ முதல் 175 கி.மீவரை வீசும். 195 கி.மீ வரை வேகத்தில் வீசும். இந்நிலையில் கரைக்கு வரும்போது, காற்றின் வேகம் 125-135 கி.மீ வேகத்தில் காற்று வீசும். 150 கி.மீ வரை காற்றின் வேகம் அதிகரிக்கும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி கடற்பகுதிகள், குறிப்பாக கட்ச், துவாரகா, போர்பந்தர், ஜம்நகர், ராஜ்கோட், ஜுனாகாத், மோர்பி மாவட்டங்களில், கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையிலிருந்து மிக கனமழையாக சில இடங்களில் அதிகரிக்கும். கட்ச், தேவபூமி துவாரகா , ஜாம்நகர் பகுதியில் கடுமையாக மழை பெய்யும். குஜராத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மோர்பி மற்றும் ஜுனாகாத் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி வரவும், ஜுன் 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளனர். பாதிக்கபடும் பகுதிகளில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“