Advertisment

400 மணி நேர போராட்டம் வெற்றி: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு

மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

author-image
WebDesk
New Update
Uttarakhand Tunnel Rescue Operation

Uttarakhand tunnel rescue ends in success- இரவு 8 மணியளவில், முதல் தொழிலாளி வெளியே அழைத்துச் வரப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Uttarakhand tunnel rescue ends in success | உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவ.12ஆம் தேதி முதல் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நடவடிக்கை முடிவில் வெற்றியை கண்டுள்ளது. முதலில், மீட்புப் பணி பாதிக்கப்பட்டதால், 57 மீட்டர் இடிபாடுகளில் இருபுறமும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment

இறுதியில் துளையிடும் இயந்திரம் உதவியின்றி சுரங்கத் தொழிலாளர்கள்தான் கடைசி 12 மீட்டரை தோண்டி, சிக்கியவர்களை அடைந்தனர்.

இரவு 8 மணியளவில், முதல் தொழிலாளி வெளியே அழைத்துச் வரப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி நன்றி

உத்தகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பிரதமர் மோடி தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இருந்தார். மீட்பு நடவடிக்கையின் புதுப்பிப்புகளை கேட்டறிந்தார். எப்படியாவது எல்லாரையும் பத்திரமாக மீட்கும் கடமையை எனக்குக் கொடுத்தார்.

அவர் துணை இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர் இப்போதுதான் என்னிடம் பேசினார், அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

மேலும் அவர்களை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வசதிகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்” என்றார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : All 41 trapped workers out as 400-hour Uttarakhand tunnel

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment