நவம்பர் 16ம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதி

Supreme Court Verdict on Sabarimala Temple : முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு உறுதி...

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமதி. வருகின்ற நவம்பர் 16ம் தேதி முதல் பெண்கள் கோவிலுக்குச் செல்லலாம் என அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

கடவுள் முன் ஆணும் பெண்ணும் சமம். பாலின வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டி கடவுள் வழிபாட்டினை தடை செய்வது இந்திய அரசியல் சாசனப்படி தவறு என்று கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனைத் தொடர்ந்து சபரிமலையில் பெண்கள் வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை என்று கூறி ஆணையிட்டது தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் – எதிர்ப்பும் ஆதரவும்

இதனை எதிர்த்து கேரளாவின் பந்தளம் ராஜ குடும்பத்தினர் வீதியில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினர். ஆனால் கேரள அரசு சார்பில் இந்த மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாநில அரசு விரும்பவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இந்த செய்தி குறித்து மேலும் படிக்க

இந்நிலையில் நேற்று கேரள சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களையும், திருவிதாங்கூர் தேவசம் போர்ட் உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த செய்தி குறித்து மேலும் படிக்க

தற்போது அடுத்த மாதம் 16ம் தேதி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற இருப்பதை முன்னிட்டு பெண்களின் வழிபாட்டிற்கு ஆலயம் திறக்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

மழை பெய்து பலத்த சேதங்களை சந்தித்திருப்பதால் தற்போது பெண்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்க இயலாது என்பதால் அடுத்த மாதத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close