Advertisment

முக்கியமான 5 தலைவர்களை தவிர சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் காஷ்மீரில் விடுதலை!

விடுதலை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்ட பிறகு எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
All detainees in JK MLA hostel will be released

All detainees in JK MLA hostel will be released

All detainees in JK MLA hostel will be released : தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட 5 முக்கிய ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் தவிர எம்.எல்.ஏ ஹாஸ்டலில்  தங்கியிருக்கும் அனைத்து தலைவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 நாட்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் இன்னும் முறையான இணைய வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாமல் இருக்கிறது காஷ்மீர்.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

5 முக்கிய தலைவர்கள் முறையே பீப்பிள்ஸ் கான்ஃப்ரென்ஸ் கட்சியின் தலைவர் சாஜத் லோன், தேசிய மாநாட்டு கட்சியின் பொது செயலாளர் அலி முகமது சாகர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவருமான ஷா ஃபாசல், மூத்த பி.டி.பி கட்சியின் தலைவர் நயீம் அக்தர் மற்றும் பி.டி.பி இளைஞரணியின் தலைவர் வஹீத் ஆர் ரெஹ்மான் பாரா ஆகியோர் தற்போதைக்கு விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக தடுப்புக் காவலில் இருக்கும் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் விடுதலை பத்திரங்களில் அவர்கள் கையெழுத்திட்ட பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காஷ்மீர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்றைய தேதியில் 26 ந்நபர்கள் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். பி.டி.பி கட்சியின் அஜாஸ் மிர், என்.சி. யின் சல்மான் சாகர், ஷோவ்கத் கணனி, அலி முகமது தார் மற்றும் அல்டாஃப் குலூ ஆகியோர் அடங்குவார்கள். அவாமி இத்திஹாத் கட்சியின் வழக்கறிஞர் பிலால் சுல்தானும் அங்கு தான் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷேர் -இ - காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இருந்து அவர்கள் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்கு முன்பு அங்கே 58 நபர்கள் தங்கியிருந்தனர் குறிப்பிடத்தக்கது.

800க்கும் மேற்பட்டோர் இன்னும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரங்களை ரத்து செய்தது மத்திய அரசு. அதனால் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் முன்னாள் முதல்வர்கள் யாரையும் வெளியிடும் எண்ணம் இதுவரை அரசுக்கு இல்லை. ஃபரூக் அப்துல்லா அவருடைய குப்கார் சாலையில் அமைந்திருக்கும் இல்லத்தில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒமர் அப்துல்லா ஹரி நிவாஸிலும், மெகபூபா முஃப்தி அரசு அலுவலகம் ஒன்றிலும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திங்கள் கிழமையன்று முன்னாள் பி.டி.பி. எம்.எல்.ஏ ஜஹூர் மிர், பஷீர் மிர், குலாம் நபி, என்.சி. தலைவர் மற்றும் இஷ்ஃபாக் ஜப்பார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ யாஷீர் ரெஷி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 145 நாட்களுக்கு பிறகு இணைய சேவையை பெற்றது கார்கில்!

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment